3,359 இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.9.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 12, 2023

3,359 இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.9.2023

3,359 இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 3,359 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் காவலர்(ஆயுதப்படை மற்று் சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023க்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

அறிக்கை எண்.02/2023

மொத்த காலியிடங்கள்: 3,359

துறை: காவல் துறை

பதவி: இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை)

காலியிடங்கள்: 780 (பெண்கள்)

துறை: சிறை மற்றும் சீர்த்திருத்தத் துறை

பதவி: இரண்டாம் நிலை சிறைக் காவலர்

காலியிடங்கள்: 86 (ஆண்கள் 83, பெண்கள் 3)

துறை: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

பதவி: தீயணைப்பாளர்

காலியிடங்கள்: 674

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 18 வயது நிறைவு பெற்றவராகவும், 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றிருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் மொத்த காலிப் பணியிடங்களில் 20 சதவிகிதம் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தமிழ்மொழித் தகுதித் தேர்வு 80 மதிப்பெண்கள், முதன்மை எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.


தேர்வு கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.8.2023


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.9.2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.