10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு - அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குதல் சார்பு - CEO சுற்றறிக்கை - நாள்: 04/08/2823 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 5, 2023

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு - அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குதல் சார்பு - CEO சுற்றறிக்கை - நாள்: 04/08/2823

கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் சுற்றறிக்கை நாள் 04 /08/2823

பொருள்

கன்னியாகுமரி மாவட்டம் - 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு- அனைத்து வகை வினாக்களும் அடங்கிய ஒரு மணி நேர தேர்வு - 07118/2023 முதல் தொடங்கி நடைபெறுதல் -- அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும்- அறிவுரை வழங்குதல் சார்பு

பள்ளிக்கல்வித்துறை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12- ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்துதல் சார்பாக அனைத்து மதிப்பெண் வினாக்கள் அடங்கிய ஒரு மணி நேர அலகுத் தேர்வு 07082023 முதல் தொடர்ந்து நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வினை மாணவர்கள் நலன் கருதி பின் வரும் அறிவுரைகளை பின்பற்றி நடத்திட அனைத்து வகை உயர்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அறிவுரைகள் மேற்படி தேர்வுக்கு இணைப்பில் உள்ள பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் தேர்வுக்கான நேரம் மாலை 4.15 மணி முதல் 5.15 மணி வரை வினாத்தாள் முதன்மைக்கல்வி அலுவலக மின்னஞ்சல் வழி தினமும் காலை வைக்கப்படும். வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அனுப்பி இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை தனி பதிவேட்டில் பதிவு செய்து வைத்துக்கொள்ள தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விளாத்தாள்கள் தமிழ்/ஆங்கில வழியில் வழங்கப்படும். அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மேற்படி தேர்வினை நடத்திட கேட்டுகொள்ளப்படுகிறார்கள். சுயநிதி மெட்ரிக் பள்ளிகளை பொறுத்த வரையில் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் இத்தேர்வினை நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.