மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு ITK தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி - நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 10, 2023

மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு ITK தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி - நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Government of Tamil Nadu has released guidelines to allow use of ITK volunteers for Artist Women's Entitlement Scheme application registration

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர , முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விபரங்கள் பகிரப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு பணி!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.

- சிறப்பு முகாம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி

விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தல்

மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு பணியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் உத்தரவு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்கள்- விவரம் அளித்தல் தொடர்பாக. பார்வை:

முகாம் ஏற்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விபரங்கள் பகிரப்பட்டுள்ளன.

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 1. வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்

மாநில அலுவலகத்திலிருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில் ஒவ்வொரு நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களின் விவரங்கள் இடம் பெற்று இருக்கும். சில நியாய விலை கடைப்பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னார்வலர்கள் தகவல் தரவு பதிவுப் பணிக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். சில நியாய விலை கடைபகுதிகளில் போதிய தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இவர்களுக்கான பணி ஒதுக்கீடு வழங்கும் பொழுது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒருவேளை இரண்டு கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் அவர்களுக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் பணி வழங்கலாம்.

தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னார்வலர்களைத் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சம்மதத்தைப் பெற்று பணியில் அமர்த்துதல் வேண்டும். சில தன்னார்வலர்கள் தற்பொழுது இந்தப் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. இது தொடர்பான தகவல் பதிவை கூகுள் சீட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னார்வலர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2. வருவாய் வட்டாட்சியர் செய்ய வேண்டிய பணிகள்

தன்னார்வலர்களின் தகவல் விவரம் கிடைக்கப்பெற்றவுடன் புதிய தன்னார்வலர்கள் இல்லாத நியாய விலை கடைப் பகுதிகளுக்கு,புதிய தன்னார்வலர்களைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் இல்லை. இப்பகுதிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், வேறு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மூலமாக அடையாளம் கண்டு நியமிக்கலாம்.

வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 20% கூடுதல் தன்னார்வலர்களைப் பதிலி (Reserve) தன்னார்வலர்களாகப் பயன்படுத்துவதற்காக அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு உதவி மையத் தன்னார்வலர்கள் (Help Desk Volunteer) பொறுப்பு வழங்கலாம். விண்ணப்பப் பதிவு பணிக்குத் தேவைப்படும் பொழுது இவர்களை விண்ணப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நியாயவிலைக் கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும். மேற்கண்ட தகவல்களை அனைத்து கள அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களையும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.