மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 13, 2023

மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு ₹14.90 கோடி ஒதுக்கீடு

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ₹2,000-ஆக உயர்வு.
Promulgation of an ordinance to increase the scholarship provided to differently abled students by twofold from the financial year 2023-2024. - மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு - வழங்கப்பட்டு வரும் கல்விஉதவித் தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தியும் மற்றும் இத்திட்டத்திற்கு ரூ.14.90,52,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை

அரசாணை (நிலை) எண். 16

நாள்: 04.07.2023,

சோபகிருது, ஆனி - 19, திருவள்ளுவர் ஆண்டு. 2054. படிக்கப்பட்டது :

1. அரசாணை (நிலை) எண்.65, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2:1)த் துறை, நாள் 12.07.2013.

2. அரசாணை (நிலை) எண்.13, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2:1)த் துறை, நாள் 04.05.2018.

3. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கடித நக. எண்.3222/சிப.2/2023, நாள் 20.04.2023 ஆணை:

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையினை இரு மடங்காக உயர்த்தியும் மற்றும் 2013-2014-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணை வெளியிடப்பட்டது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2018-2019-ஆம் நிதியாண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சுமார் 52 நலத் திட்டங்கள் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்குள் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு அதிகாரப்பகிர்வு (Delegation of Power) வழங்கி ஆணை வெளியிடப்பட்டது. இவ்வாணையின் பத்தி 2(1)(4)-ல் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை (Scholarship) வழங்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.

3. 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான இத்துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:-

"மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை இரு மடங்காக உயர்த்தி, 22,300 மாணவர்கள் பயன் பெறும் வகையில் ரூ.700.00 இலட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்". 4. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகையாக அவர்கள் பயிலும் வகுப்பு / படிப்பிற்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ரூ.1,000/- முதல் ரூ.7,000/- வரை கடந்த 2013-2014-ஆம் நிதி ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்றும் மேற்படி புதிய அறிவிப்பினை தொடர்ந்து, மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை அவரவர் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்றவாறு இரண்டு மடங்காக உயர்த்தியும் இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- நிதி ஒதுக்கீடு வழங்குமாறும் அரசினைக் கோரியுள்ளார்.

5. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் செயற்குறிப்பினை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்று, மாற்றுத்திறன் மாணாக்கர்களின் சிறப்பு கல்வியினை ஊக்குவித்திட ஏதுவாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் ஆண்டு முதல் கீழ்க்கண்டவாறு உயர்த்தியும் இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- (ரூபாய் பதினான்கு கோடியே தொண்ணூறு இலட்சத்து ஐம்பத்தெரண்டாயிரம் மட்டும்) ஒப்பளிப்பு செய்தும் ஆணையிடுகிறது. மேலும், இச்செலவினத்தை 2023-2024-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது:-

6. மேலே பத்தி 5-இல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகை பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும்:-

"2235 - சமூகப் பாதுகாப்பும் நலனும் - 02 சமூக நலன் - 101 மாற்றுத்திறனாளிகள் நலன் - மாநிலச் செலவினங்கள் - BB மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்குப் படிப்புதவித் தொகைகள் 312 படிப்பு உதவி தொகைகளும், பயிற்சி உதவித் தொகைகளும் - 09 ஏனையவை" (IFHRMS DPC: 2235-02-101-BB-31209)" 7. மேலே பத்தி 5-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தில் ரூ.7,95,02,000/- 2023-2024-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டிலிருந்து மேற்கொள்ள வேண்டும். மீதமுள்ள தொகை ரூ.6,95,50,000/- கூடுதல் நிதியொதுக்கம் ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

8. மேலே பத்தி 5-இல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட கூடுதல் செலவினம் ரூ.6,95,50,000/- ஒரு "புதுத்துணைப்பணி" (New Instrument of Service) குறித்த செலவினமாகும். இதற்கு சட்டமன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதற்கண் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதி (வ.செ.பொ.I)த் துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு. எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-ல் உள்ள அட்டவணை "A" படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதி (வ.செ.பொ.I)த் துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார். மேலும் இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2023-2024-ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதி (வ.செ.பொ.1/ச.ந.)த் துறைக்கு அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் கொள்ளப்படுகிறார். நல் இயக்குநர் அவர்கள் கேட்டுக்

9. இவ்வாணை நிதித்துறையின் அ.சா. எண்.24918/நிதி(சந)/2023, நாள் 03.07.2023 மற்றும் கூடுதல் நிதியொதுக்கம் பேரேடு எண்.423 (நானூற்று இருபத்தி மூன்று) (IFHRMS ASL No.2023070423)-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.