1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க இடைக்கால தடை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 20, 2023

1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க இடைக்கால தடை

1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க இடைக்கால தடை

தமிழ்நாட்டில் 1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு பரவியபோது, தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவிய மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக இருந்த 1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடத்தியபோது, தங்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கவில்லை எனக் கூறி, மருத்துவ படிப்பையும், பயிற்சியையும் முடித்த ஆதம்ஸ் புஷ்பராஜ், ராஜ்குமார் உள்பட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கொரோனா காலத்தில் நூறு நாட்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்ட நிலையில், 300 நாட்கள் பணிபுரிந்த தங்களுக்கு முன்னுரிமையும் வழங்கவில்லை. மற்ற மாநிலங்களைப் போல ஊக்க மதிப்பெண்களும் வழங்கவில்லை என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, அரசு மருத்துவர்கள் பணிக்கான தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பணி நியமன உத்தரவுகளை பிறப்பிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு, மருத்துவ கல்வி இயக்குனரகம் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.