அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 11, 2023

அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

Actions to be taken in recommending applications seeking proof of non-obstructiveness of teachers moving from unit to unit - Procedures of the Associate Director of School Education - அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வி 2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் - பள்ளிக் கல்வித் துறையிலிருந்து தொடக்கக் மற்றும் பிற துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அலகு/துறை மாறுதலில் செல்ல தடையின்மைச்சான்று பெறுதல் சார்பான அறிவுரை வழங்குதல் சார்பாக.

பார்வை:

1)அரசாணை நிலை எண்.209 பள்ளிக் கல்வித் துறை நாள்.08.05.1997

2)அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021

3)தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.21243/சி3/இ1/23 நாள்.26.6.23&6.7.2023

பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் இயக்குநரின் அலுவலர்களின் செயல்முறைக்கிணங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி கவனம் ஈர்க்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு / துறை மாறுதல் மூலம் தொடக்கக் கல்வி துறை, மாநகரட்சி, கள்ளர் சீரமைப்புத் துறை, ஆதிதிராவிட நலத் துறை மற்றும் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல அத்துறையின் (ப.க.து) தலைவரால் (இயக்குநர்) உரிய தடையின்மைச் சான்று பெறுதல் அவசியமாகிறது.

மேற்படி அலகுவிட்டு அலகு /துறை மாறுதலில் செல்வதற்கு தடையின்மைச் சான்று (Noc) கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து கீழ்க்காணும் ஆவணகளை கருத்துருவில் இணைத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. கருத்துருவில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

i) தனியரின் அலகு/துறை மாறுதல் கோரும் விருப்ப கடிதம்

ii) தற்போது வகிக்கும் பதவியில் வழங்கப்பட்ட பணிநியமன ஆணை / பதவி உயர்வு ஆணை நகல்

தற்போது வகிக்கும் பதவியில் உரிய அலுவலரால் வழங்கப்பட்ட பணிவரன்முறை ஆணை நகல் (அ) பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகல்

iv) தற்போது வகிக்கும் பதவியில் (இநிஆ/பஆ/முகஆ)தகுதிகாண் பருவம் முடித்த ஆணை நகல் (அ) பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகல்

v) சார்ந்த ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இல்லை எனச் சான்று தலைமையாசிரியரால் வழங்கப்பவேண்டும் (அச்சான்றில் முதன்மைக் கல்வி அலுவலர் மேலொப்பம் இடுதல் வேண்டும்)

vi) சார்ந்த ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் நிலுவையில் இல்லை.

vi) சார்ந்த ஆசிரியர் அரசுக்கு செலுத்த வேண்டிய ஏதேனும் நிலுவைத் தொகை / தணிக்கைத் தடைகள் ஏதும் இல்லை எனச் சான்று தலைமையாசிரியரால் வழங்கப்பவேண்டும் (அச்சான்றில் முதன்மைக் கல்வி அலுவலர் மேலொப்பம் இடுதல் வேண்டும்)

vii) அலகு விட்டு அலகு / துறை மாறுதலில் செல்லும் ஆசிரியர் மாறுதல் பெறும் அலகில் பணிமூப்பில் மிகவும் இளையவராக கருதப்படுவார் என்பதற்கான ஆசிரியரின் உறுதிமொழி கடிதம் பெற்று இணைக்கவும்.

viii) சார்ந்த ஆசிரியரின் பணிசார்ந்த விவரங்கள் (Service Particulars) பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில்

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.