தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு டி.பி.ஐ வளாகத்தில் நடைபெறும் போராட்டத்தில் மற்றும் பேச்சுவார்த்தையிலும் பங்கேற்காது - நிறுவனத் தலைவர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 24, 2023

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு டி.பி.ஐ வளாகத்தில் நடைபெறும் போராட்டத்தில் மற்றும் பேச்சுவார்த்தையிலும் பங்கேற்காது - நிறுவனத் தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு டி.பி.ஐ வளாகத்தில் நடைபெறும் போராட்டத்தில் மற்றும் பேச்சுவார்த்தையிலும் - பங்கேற்காது - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - அறிவிப்பு

~~~~~~

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் கடந்த மாதம் ( 22, 24.06.2023 ) 22 மற்றும் 24ம் தேதிகளில் ஆசிரியர்கள் சங்கங்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்து 22ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு உயர்நிலை மேனிலைப்பள்ளிகள் பணியாற்றும் தலைமையாசிரியர் சங்கங்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்கள் சங்கங்கள் பணியாளர் சங்கங்களுடன் தனித்தனியாக தன் அறைக்கு அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தார் அதாவது 22ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நல்லிரவு 12.30 மணிவரை நீடித்தது மீண்டும் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடக்கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள், கணினி பயிற்றுனர் , ஆசிரியர் பயிற்றுனர பகுதிநேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற ஊழியர்கள் சங்கங்களை ஒவ்வொன்றாக அழைத்து அனைவரது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார் அதவாது இரண்டு நாட்கள் சேர்த்து 20 மணி நேரத்திற்கும் மேலாக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இல்லாதவகையில் கோரிக்கைகளை கேட்டறிந்தார் குறிப்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியரகள் நல கூட்டமைப்பின் கோரிக்கையை ஒருவரிக்கூட விடாமல் படித்து ஒவ்வொரு கோரிக்கைக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களையும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் , தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் கேட்டு இந்த கோரிக்கைகளை எப்படி நிவர்த்தி செய்வது அதற்கான முகாந்திரத்தை முன்னெடுக்கும்மாறு அறிவுறுத்தினார் இதுபோன்று தான் அனைத்து சங்கத்தினரின் கோரிக்கைகளையும் கேட்டாறிந்தார் , இரண்டுநாட்கள் நடைபெற்ற சங்கங்களுடனான சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அவர்கள் ஒவ்வொரு சங்கங்களின் கோரிக்கைகளையும் 20 மணிநேரம் ஒதுக்கி கேட்டறிந்தேன் அனைத்து கோரிக்கைகளையும் தொகுத்து நிதி தேவைப்படாத கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி சார்ந்த கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்புதல்பெற்று நிதி அமைச்சரிடம் கொண்டு சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார் , கூட்டம் நடத்தி ஒரு மாதமே ஆகின்ற சூழ்நிலையில் போராட்டம் நடத்துவதை எப்படி ஏற்க முடியும் அதேபோன்று அமைச்சர் இப்போது தான் சங்கங்களின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார், அதன் பின்னர் இன்னொரு பேச்சுவார்த்தை நடத்துவது எதற்கு என புரியவில்லை

அமைச்சர் அவர்கள் சங்கங்களுடனான சந்திப்பு நடத்தி ஒரு மாதம் கூட ஆகவில்லை ,கால அவகாசம் கொடுக்காமல் 28ம் தேதி நடத்தும் போராட்டத்திலும் மற்றும் 25.07.2023 அன்று சங்கங்களுடனான நடக்கும் பேச்சு வார்த்தையிலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.