சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் (19-07-2023) மேற்கொள்ள வேண்டிய பணிகள்... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 19, 2023

சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் (19-07-2023) மேற்கொள்ள வேண்டிய பணிகள்...

அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

19-07-2023 புதன்கிழமை அன்று மாலை 3மணி முதல் 4.30மணி முடிய நடைபெறும் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்...

1. 2022-23ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு/12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களில் தற்போது துணைத்தேர்வு எழுதாதவர்கள் பெயர்கள் EMIS இணையத்தளத்தில் அந்தந்த பள்ளியின் USER NAME மற்றும் PASSWORD பயன்படுத்தி Login செய்து தெரிந்து கொள்ளலாம். http://emis.tnschools.gov.in

Type your School User Name Password to Login > In Home Screen Click the "School" Icon There in "School Details", You have to Click "X,XII Supplementary not applied Students List"

The Supplementary Exam not applied Students Names are displayed

2. EMIS இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள தஙகள் பள்ளியில் 10-ஆம் வகுப்பு/12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதாத மாணவர்களை மற்றும் மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு இன்று 19-07-2023 புதன்கிழமை நடைபெறும் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. இக்கூட்டத்தில் அம்மாணவர் மற்றும் அவரின் பெற்றோரிடம் கல்வி கற்றலின் அவசியத்தை எடுத்துக்கூறி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவரை அரசு/தனியார் தொழிற்கல்வி நிறுவனம் (ITI), 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவரை அரசு/தனியார் தொழிற்கல்வி நிறுவனம் (ITI) அல்லது பல் தொழில்நுட்பக்கல்லுாரி (Polytechnic) சேர்ந்து படிக்க ஆலோசனை வழங்கி, அக்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயில Admission பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும். 4. மேலும் EMIS இணையத்தளத்தில் 10-ஆம் வகுப்பு/12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றிய விவரங்களையும், மாணவன் IT/Polytechnic சேர்ந்த விவரத்தையும் கண்டிப்பாக எந்தவிதமான விடுதல் இன்றி பதிவேற்றம் செய்யவேண்டும்.

5. கல்வி பயில சேராத மாணவர்களை தினமும் தொடர்புகொண்டு அவனை கண்டிப்பாக ITI/Polytechnic சேர்ந்து படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணி ஒரு தொடர்பணியாக இருக்கவேண்டும்.

6. பல் தொழில்நுட்பக்கல்லுாரியில் (Polytechnic) சேர ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிய காலஅளவு உள்ளதால், அக்கல்லுாரியில் சேர விருப்பம் உள்ள மாணவர்களின் விவரங்களை Polytechnic Admission-க்குரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும். தொழிற்கல்வி நிறுவனத்தில (IT) சேர்ந்து கல்வி பயில விருப்பம் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று Spot Admission பெற்றுக்கொள்ளலாம்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், துாத்துக்குடி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.