தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - பத்திரிகை செய்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 23, 2023

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - பத்திரிகை செய்தி



ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் , பூந்தமல்லி ஒன்றியம், மற்றும் ஆவடி மாநகராட்சி அனைத்து வகை பள்ளிகளை திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலக எல்லைக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் -அவர்கள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் , திருவள்ளூர் மாவட்ட தொடக்க, இடைநிலை கல்வி அலுவலர்கள் மற்றும் பொன்னேரி தொடக்க இடைநிலை மாவட்டக் கல்வி அலுவலர்கள் செயல்பட்டு வருகிறார்கள் , ஏற்கனவே நிர்வாக செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட பரப்பளவிற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டிருந்தது அந்த வகையில் திருவள்ளூர் , திருத்தணி பொன்னேரி , ஆவடி மற்றும் அம்பத்தூர் என பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது , ஆசிரியர் சங்கங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அவர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர் அதனை ஏற்று தொடக்க்கல்வித்துறைக்கு என மாவட்டக்கல்வி அலுவலர்களை நியமித்து செயல்பட்டு வருகிறார்கள் அந்த வகையில் திருவள்ளூர் பொன்னேரி இடைநிலை மற்றும் தொடக்கக்கல்விக்கு என மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி அலுவர்கள் பணியற்றி வருகின்றனர் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் மீஞ்சூர் , சோழவரம் கும்மிடிப்பூண்டி , எல்லாபுரம், பழல், பூந்தமல்லி ஆகிய ஒன்றியங்கள் மற்றும் ஆவடி மாநகராட்சி பிரித்து செயல்பாட்டில் உள்ளது , இதில் பூந்தமல்லி ஒன்றியம் ஆவடி மாநகராட்சியில் இயங்கும் பள்ளிகளுக்கும் பொன்னேரி மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கும் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இதனால் நிர்வாக செயல்பாடுகள் தொய்வடைகிறது அதாவது மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைய தாமதம் ஏற்படுகிறது அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகுறது ஆசிரியர்கள் தலைமையாசிரியர்கள் அவசர கூட்டங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது ஆதலால் திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் உள்ள திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவகத்திற்கும் பூந்தமல்லி ஒன்றியம் ஆவடி மாநகராட்சி பள்ளிகளுக்கும் இடைப்பட்ட தூரம் 25 கிலோ மீட்டர் மட்டுமே ஆதலால் நிர்வாக செயல்பாடு சிறப்பாக செயல்பட நலத்திட்ட உதவிகள் மாணவர்களுக்கு காலத் தாமதம் இன்றி சென்றடைய அலுவலர்கள் ஆய்வு செய்வதற்கு , ஆசிரியர்களும் மாவட்டக் கல்வி அலுவலகம் செல்வதற்கும் ஆசிரியர்கள பயிற்சி கூட்டங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் , மதிப்புமிகு பள்ளிக்கத்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அவர்களையும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மதிப்புமிகு முனைவர் க.அறிவொளி அவர்களையும் , தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் மதிப்புமிகு முனைவர் ச.கண்ணப்பன் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.