TETOJAC போராட்ட அறிவிப்பு! பேச்சுவார்த்தை உடன்பாடு! போராட்டம் வாபஸ்! 40 நாளில் நடந்த மாற்றம்! அடுத்த கட்டம். . .? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 20, 2023

TETOJAC போராட்ட அறிவிப்பு! பேச்சுவார்த்தை உடன்பாடு! போராட்டம் வாபஸ்! 40 நாளில் நடந்த மாற்றம்! அடுத்த கட்டம். . .?

*TETOJAC போராட்ட அறிவிப்பு! பேச்சுவார்த்தை உடன்பாடு! போராட்டம் வாபஸ்! 40 நாளில் நடந்த மாற்றம்! அடுத்த கட்டம். . .?

*06.06.2023 :* TETOJAC கூடி TET வழக்கு உள்ளிட்ட 27 கோரிக்கைகளுக்காகப் போராடப்போவதாகக் கூறியது.

*06.06.2023 :* அன்று மாலையே இயக்குநர்களிடம் கடிதம் அளிக்கப்பட்டது.

*07.06.2023 :* அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

*09.06.2023 :* பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறி போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

_TET தீர்ப்புத் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மேல்முறையீடு செய்யும் எனவும், தொடக்கக்கல்வித்துறை சார்ந்த 27 கோரிக்கைகளின் மீது படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக TETOJAC கூறியது._ _தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்கில் டிட்டோஜாக்கும் இணைந்து சட்டரீதியான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது._

*20.07.2023 :* இன்று கூடிய TETOJAC, 184 ஆசிரியர்களைக் கொண்டு வழக்கு போட்டுவிட்டதாகக் கூறியுள்ளது.

மேலும், 26 & 27 தேதிகளில் அமைச்சரையும் அதிகாரிகளையும் மீண்டும் சந்திப்பதாகக் கூறியுள்ளது.

- - - - - - - - -

ஜுன் 9 பேச்சுவார்த்தைப்படி, அரசு TET வழக்கில் மேல்முறையீடு செய்துவிட்டதா?

அதற்கான எந்தத்தகவலும் அரசு சார்பில் இதுவரை வெளியாகவில்லையே ஏன்?

ஒருவேளை அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனில், தற்போது TETJAC தொடர்ந்துள்ளது எந்த வழக்கு? TET வழக்கில் 'பதவி உயர்வு தொடர்பான கொள்கை முடிவை எடுங்கள்' என்ற தீர்ப்பு வெளியாகி சுமார் 2 மாதங்களான பின்பும் அரசு இதுவரை கொள்கை முடிவு எடுக்காதது ஏன்?

பதவி உயர்விற்கு TET தேவையில்லை என்று அரசு கொள்கைமுடிவு எடுக்க வேண்டும் என்ற TETOJAC கோரிக்கை என்ன ஆனது?

TETOJAC-ன் 27 கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பேச்சுவார்த்தையில் முடிவாகி போராட்டமும் திரும்பப்பெறப்பட்டு 41 நாள்கள் கடந்துவிட்ட சூழலில், 27-ல் ஒன்றாவது செயலாக்கத்திற்கு வந்துள்ளதா?

இதுவரை ஏதும் செயல்பாட்டிற்கு வரவே இல்லை எனும் சூழலில், 26-ஆம் தேதிக்குள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் அரசு இறங்காவிடில். . .

ஜூலை 27-ல் கூடும் TETOJAC, தனது பழைய 27 அம்சக் கோரிக்கைகளுக்காகவும்,EE & EMIS நெருக்கடியில் இருந்து ஆசிரியர்கள் & மாணவர்களை விடுவித்து மகிழ்வான கல்வியை வழங்கவும் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்குமா?

? ? ? ? ? ? ?

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.