சமூகநல ஆணையரகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - பதவி உயர்வின்றி ஒரே பதவியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தோருக்கு- 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு ஊதிய உயர்வு வழங்கியது- தணிக்கைத் தடை எழுப்பியது - அறிக்கை கோருதல் - தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 4, 2023

சமூகநல ஆணையரகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - பதவி உயர்வின்றி ஒரே பதவியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தோருக்கு- 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு ஊதிய உயர்வு வழங்கியது- தணிக்கைத் தடை எழுப்பியது - அறிக்கை கோருதல் - தொடர்பாக



சமூகநல ஆணையரகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - பதவி உயர்வின்றி ஒரே பதவியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தோருக்கு- 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு ஊதிய உயர்வு வழங்கியது- தணிக்கைத் தடை எழுப்பியது - அறிக்கை கோருதல் - தொடர்பாக - Social Welfare Commission - Revolutional Leader MGR Nutrient Scheme - Special pay increment once in 10 years to those who have worked in the same post for more than 10 years without promotion - Raised suspension of audit - Call for report - பார்வை 1ல் காணும் அரசாணையின்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களாக 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருவோரும், தற்போது பணியில் சேர்ந்தோரும் ஒரே ஊதியம் பெறும் நிலை உள்ளதனைக் கருத்தில் கொண்டு பணி மூப்பு அடிப்படையில் பணியில் மூத்தோருக்கு ஊதிய உயர்வு ஏற்படும் வகையில் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பத்தாண்டுக் கால பணிக்காலம் முடித்தவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு 15.09.2008-ல் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.

பார்வை 2-ல் காணும் அரசாணையின்படி மேற்படி திட்டத்தின் கீழ் பணிபுரியும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அவரவர் பணியில் சேர்ந்த நாள் முதல் 10/20 வருடங்கள் பணி முடித்தவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு அளிக்கவும் மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் பணி முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு தேக்க நிலை ஊதிய உயர்வு 30.04.2015 முதல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

பார்வை 3-ல் காணும் அரசு கடிதத்தின்படி சம்பந்தப்பட்ட பணியாளர்கள் 10/20 ஆண்டுகள் பணி முடித்த நாள்.30.04.2015 நாளிட்ட அரசாணைக்கு முன்னரே வந்தாலும் இந்த சிறப்பு ஊதிய உயர்வுக்கான பணப்பயன் 30.04.2015 முதலே வழங்கப்பட வேண்டும் என அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. பார்வை 4ல் காணும் அரசுத் துறை நிறுவனத் தணிக்கைத் துறை கடிதத்தில், பார்வை 4-ல் காணும் அரசு கடிதத்தின் அறிவுரையின்படி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்ட அங்கன்வாடி அமைப்பாளர்கள்/ சமையலர் / சமையல் உதவியாளர்கள் ஆகியோர் முறையே தங்கள் பதவிகளில் 10ஆண்டுகள்/20ஆண்டுகள் பணி முடித்த நாள் 30.04.2015க்கு முன்னரே வந்தாலும் அதற்கான பணப்பயன் 30.04.2015 அன்றே வழங்கப்பட வேண்டும் என்றும், 30.04.2015க்கு முன்னரே (அதாவது 16.09.2008க்குப் பிறகு) 10/20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பணப்பயன் அளிக்கப்பட்டுள்ள இனங்களில் எந்த தேதி முதல் அவ்வாறு பணப்பயன் அளிக்கப்பட்டுள்ளதோ அந்த தேதி முதல் 29.04.2015 முடிய நிலுவை ஊதியம் வழங்கப்பட்டிருப்பின் அதனை பிடித்தம் செய்ய அறிவுறுத்தி தடை எழுப்பப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் பொருள் தொடர்பாக தங்களது மாவட்டத்தில் எழுப்பப்பட்டுள்ள தணிக்கைத் தடை விவரங்கள் குறித்து இவ்வாணையரகத்திற்கு உடன் அறிக்கை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பார்வை 2ல் காணும் அரசாணையின்படி, உரிய நடைமுறைகள் தற்போது பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.