பள்ளி வாழ்வின் கடைசி 300 நாட்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 9, 2023

பள்ளி வாழ்வின் கடைசி 300 நாட்கள்

பள்ளி வாழ்வின் கடைசி 300 நாட்கள்

என் மகளை, அவளின் 2 வகுப்பு, ஆரம்ப தினத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். அப்போது அவளின் பள்ளிப்பருவ காலம் முடிய இன்னும் 300 நாட்கள் தான் உள்ளன என்றும், வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் அவள் உள்ளாள் என்றும் தோன்றியது. அந்த நொடி, என்னுள் எழுந்த சிந்தனையை உங்களுடன் பகிர்கிறேன்..

PreKG முதல் 2 வரை ஏறக்குறைய 5000 நாட்கள் பள்ளிப் பயணம்நடைபெறுகிறது. அந்தப் பயணத்தின் கடைசி 300 நாட்கள், அதாவது, பள்ளிப் பருவம் பூஜ்யமாகும் நாளை நோக்கி வேகமாக பயணிக்க ஆரம்பித்துள்ள காலகட்டம் இது.

இந்த 5000 நாட்கள் பயணம் வெற்றிகரமாய் முடிவடைந்துள்ளதா என்பதை 2 இறுதி தேர்வின் மதிப்பெண்கள் தான் நிர்ணயிக்கப் போகின்றன என்பது மறுக்க இயலாத உண்மை. அதுமட்டுமல்லாமல், மனித வாழ்வின்ஏழில் ஒரு பகுதியின் வெற்றி, இந்தஇறுதி தேர்வில் பெறப்போகும் மதிப்பெண்களைப் பொறுத்திருக்கிறது. (ஆயுட்காலம் 100 வருடங்கள் / 36500 நாட்கள் என்று கருதினால், 5000 நாட்கள் என்பது ஏழில் ஒரு பகுதி) விரும்பிய மதிப்பெண்கள்:

நீங்கள் விரும்பிய படிப்பினை தேர்வு செய்யவும், வாழ்க்கைப் பாதையின் திசையினை நிர்ணயிக்கவும், உதவக்கூடிய மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற வழிவகுக்கும் நாட்கள் இவைதான்.

படிப்பு என்பதுதான் வாழ்க்கையை முடிவு செய்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், பெரும்பான்மையினருக்கு, படிப்பு தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனமான ஒரு உண்மை..

ஒரு சிலர் வாழ்வுதான், படிப்பில்லாமலும் சிறக்கிறது, அதற்குக் காரணம்கல்விக்கு பதில், அவரிடம் வேறு ஏதோஒரு சிறப்புத் தன்மை இருந்திருக்கும். சிறப்பு தன்மையோ அல்லது நல்லகல்வியோ அற்றவர் வாழ்வு ஏழ்மைநிலையிலோ, நடுத்தர வர்க்கத்தின ருக்குக் கீழ் நிலையிலோதான் அமை கிறது.

இவர்களால் எப்போதும், உயர்நிலைக்குச் செல்ல முடிவதில்லை.இத்தகைய சாதாரண வாழ்வே போதும் என நினைப்பவர்கள், மேற்சொன்ன இந்த 300 நாட்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

“வாழ்க்கையென்பது வெற்றி பெறத்தான்” என்று நீங்கள் கருதினால், மதிப்பெண்களால் பெறப்படும் இந்த வெற்றி உங்களுக்கு முக்கியமானதாகும். சிறந்த மதிப்பெண் பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்நாட்களை திறம்பட பயன்படுத்துங்கள். முதலில் கவனச்சிதறல்களை தவிர்த்திடுங்கள், (TV, CINEMA, SOCIAL MEDIA etc).

இவற்றையெல்லாம் தவிர்த்திட வேண்டுமென்றால் “உங்களை நீங்களே வெற்றி கொள்ள வேண்டும்“.

‘‘மனநிலையை வெற்றி பெறுதல், வெற்றிக்கான எண்ணங்களை மனதில் திடமாக்குதல், மெய்யான உழைப்பு ஆகியவற்றின் அளவு, வெற்றியின் தரத்தை முடிவு செய்கிறது’’. வாழ்க்கையில் பின்னர் பெறப்போகும் அனைத்துவகை வெற்றிகளுக்கும், அடித்தளமாகவும், முதல் வெற்றியாகவும் அமையப்போவதால், இந்த 300 நாட்களை மிகத் திறமையாய் திட்டமிடுங்கள்.

எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றால்,5000 நாட்கள் பயணம் சிறப்பான வெற்றியடைந்ததாக கருதுவீர்கள் என்பதை முதலிலேயே முடிவு செய்துஅதன்படி, படிப்பதில் நேரத்தை செலவிட்டு, திட்டமிட்ட மதிப்பெண்ணை பெற்றிடுங்கள்.

வெற்றிகரமாக பயணிக்க... மனித வாழ்வின் உன்னத நிலையான, அன்பான மகிழ்ச்சியான, வளமான மற்றும் உயர்வான இல்லற வாழ்விற்கு அடித்தளமாக இவற்றை அமைத்து வெற்றிகரமாக பயணிக்க இந்த 300 நாட்கள் திட்டமிடல் பெருந்துணை புரியும்..

“ஒளிமயமான எதிர்காலத்திற்கான அடித்தளமிடும் நாட்களே, இந்த 300 நாட்கள்”. என்பதை மனதில் பதிவிட்டு தினம் செயல்பட்டு உயர்வடையுங்கள். காலம் இன்னும் கடந்து விடவில்லை.

- கட்டுரையாளர், எழுத்தாளர், ‘வல்லமை சேர்’, ‘வேர்களின் கண்ணீர்’ ஆகிய புத்தகங்களின் ஆசிரியர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.