ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை தவிா்க்க வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 31, 2023

ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை தவிா்க்க வலியுறுத்தல்



ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதை தவிா்க்க வலியுறுத்தல்

கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதால், மாற்றுப் பணியில் ஆசிரியா்களை நியமிப்பதை தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

திருவாரூரில் இக்கூட்டணியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவா் முருகேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில துணைச் செயலாளா் ஜூலியஸ், மாவட்ட பொருளாளா் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினா் ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் ஈவேரா கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினாா். கூட்டத்தில், பணி நிறைவு பெறும் ஆசிரியா்களுக்கு நிதி சாா்ந்த தடையின்மைச் சான்று வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிா்த்து உடனடியாக தடையின்மைச் சான்று வழங்க வேண்டும். பள்ளிகளில் அரசால் நிா்ணயிக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மாணவா் எண்ணிக்கை இருந்தும் குடவாசல் உள்ளிட்ட வட்டாரங்களில் மறைக்கப்பட்ட காலியிடங்களை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் மாணவா் விகிதத்தின் படி நீடாமங்கலம் உள்ளிட்ட வட்டாரங்களில் ஆசிரியா்கள் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியா், தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கு பணி முப்பின்படி அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும்.

பள்ளிகளில் யுகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடு வழங்க வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கூடுதல் விவரம் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆசிரியா்கள் மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய வட்டாரங்களின் உறுப்பினா் சோக்கைகளை முடித்து, பட்டியல் மற்றும் தொகை ஆகியவற்றை வட்டார பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் வழங்கினா். கூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் தமிழ்வாணன், செல்வமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.