பள்ளிகள் ஆய்வு மேற்கொள்ளுதல் சார்ந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - 01.07.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 1, 2023

பள்ளிகள் ஆய்வு மேற்கொள்ளுதல் சார்ந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - 01.07.2023

All District Education Officers are responsible for carrying out inspection of schools. Advising District Education Officers, District Coordinators District Resource Center Supervisors and Teacher Trainers – Pro – Principal Education Officer their processes – 01.07.2023

திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - 01.07.2023

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் ஆய்வு மேற்கொள்ளுதல் சார்ந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு

பார்வை (1) மற்றும் (2)-ல் தெரிவித்துள்ளவாறு ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகண ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், பள்ளியிலுள்ள பதிவேடுகள், மாணவர்களின் கற்றல் நிலை மற்றும் EMIS பதிவுகள் குறித்து கள ஆய்வு 03:07 2023 அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அணைத்து ஆய்வு அலுவர்களும் தங்களுக்கு இணைப்பில் கண்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளை பார்வையிட்டு அறிக்கையினை இச்செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள Google Form Link-ல் பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் கண்டுள்ளளறு மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் குழு ஆய்வு குறித்த மீளாய்வுக் கூட்டம் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாலை 3.30 மாணியாளவில் மற்றும் தொடக்கநிலை / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாலை 4.30 மணியாளவில், மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இக்கூட்டத்தில் சார்ந்த ஒன்றியத்தின் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை/உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.