அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 3, 2023

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு





Joint Director of School Education directed to upload existing vacancies of post graduate teachers in government secondary schools in IFHRMS - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்விப் பணி அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ கணினி பயிற்றுநர் நிலை-1/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்கள் IFHRMS-ல் அரசாணை எண் பதிவேற்றம் செய்யப்பட்டு POST ID பெறப்பட்ட பணியிடங்கள் சார்பான சான்று கோருதல் - சார்பு.

பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மேய்நிலைக் கல்வி)

செயல்முறைகள்,ந.க.எண்.00276/டபிள்யு3/83/2022

நாள் 23.03.2023 பார்வையில் காணும் இவ்வாணையரக செயல்முறைகளின்படி அரசு/நகராட்சி

பார்வை

மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலவரப்படி (கலந்தாய்விற்கு முன்னர்) காலியாக உள்ள முதுகலை/கணினி பயிற்றுநர்நிலை-1/உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை IFHRMS-ல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அரசாணை எண் பதிவேற்றம் செய்து POST ID பெறப்பட்ட பணியிடங்கள் சார்பான விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக இத்துடன் இணைத்துள்ள சான்றினை பூர்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பத்துடன் 05.06.2023-க்குள் இவ்வாணையரக டபிள்யு3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு (dsew3sec@gmail.com) மறு நினைவூட்டிற்கு இடமின்றி அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு-சான்று சான்று

இம்மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ கணினி பயிற்றுநர் நிலை-1/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்கள் ஏதும் விடுபடாமல் அனைத்து காலிப்பணியிடங்களும் IFHRMS இணையதளத்தில் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அரசாணை எண்கள் விடுதலுமின்றி பதிவேற்றம் செய்யப்பட்டு POST D பெறப்பட்டது. காலிப்பணியிடங்களில் மாறுதலில் பணியேற்கும் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படாது என சான்றளிக்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.