ஆசிரியர்களுக்கான அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வை உடன் நடத்த கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 21, 2023

ஆசிரியர்களுக்கான அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வை உடன் நடத்த கோரிக்கை!



ஆசிரியர்களுக்கான அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வை உடன் நடத்த கோரிக்கை! A request to hold a consultation for teachers to move from unit to unit!

பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களில் தமிழ் பாடத்தில் 1058, ஆங்கிலத்தில் 559, கணிதத்தில் 416,அறிவியலில் 1095,சமூக அறிவியலில் 892 என மொத்தம் 4020 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பிற துறைகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற காத்திருக்கின்றனர்.

குறிப்பாக மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் மதுரை ,தேனி மற்றும் திண்டுக்கல்லில் பணிபுரியும் வட மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனத்திலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக தங்களது குடும்பத்தை பிரிந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தற்போது தடையின்மை சான்றும் பெற்று கலந்தாய்வுக்கு தயாராக உள்ளனர். மேலும் தென் மாவட்டங்களைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வட மாவட்டங்களில் தங்களது குடும்பத்தினரை பிரிந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் 50க்கும் மேற்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையில் பணியாற்றுவதற்காக தடையின்மைச் சான்று பெற்றுள்ளனர்.

அவர்களும் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடந்து அங்கிருக்கக்கூடிய வடமாவட்டங்களைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் வெளியேறும் நிலையில் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்களில் பணியேற்கலாம் என காத்திருத்துக் கொண்டிருக்கின்றனர்.

மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்கள் அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வை மாணவர்களின் நலன் கருதி EMIS இணையதளத்தில் உடனடியாக நடத்த வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.