கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணாக்கர்களிடமிருந்து சார்ந்த பல்கலைக்கழகங்களால் வசூலிக்கப்படும் சேர்க்கைக் கட்டணத்தை ஒரே சீராக ரூ.200/- மட்டும் நிர்ணயம் செய்து ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 9, 2023

கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணாக்கர்களிடமிருந்து சார்ந்த பல்கலைக்கழகங்களால் வசூலிக்கப்படும் சேர்க்கைக் கட்டணத்தை ஒரே சீராக ரூ.200/- மட்டும் நிர்ணயம் செய்து ஆணை

கல்லூரிக் கல்வி இயக்ககம் - சென்னை-15 - கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணாக்கர்களிடமிருந்து சார்ந்த பல்கலைக்கழகங்களால் வசூலிக்கப்படும் சேர்க்கைக் கட்டணத்தை ஒரே சீராக ரூ.200/- மட்டும் நிர்ணயம் செய்து ஆணை தெரிவித்தல் – தொடர்பாக - An order has been made to uniformly fix the admission fee of Rs.200/- to be charged by the affiliated universities from students seeking admission in undergraduate courses in colleges of Arts, Science and Education.

பார்வையில் காணும் அரசாணையில் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணாக்கர்களிடமிருந்து பல்கலைக்கழகங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் வெவேறு விதமாக இருப்பதாக அறியப்பட்டதைத் தொடர்ந்து. பல்கலைக்கழகங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் இனி அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஆண்டுக்கு ரூ.200/- மட்டுமே சேர்க்கைக் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது.


எனவே, இவ்வாணை தொடர்பாக தங்கள் கட்டுபாட்டின்கீழ் இயங்கும் அரசு/ அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் 2023-2024 முதல் சேர்க்கை பெறும் மாணாக்கர்களிடமிருந்து பல்கலைக்கழக கட்டணமாக ரூ.200/- மட்டுமே பெறப்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி ஆணையினை நடைமுறைப்படுத்த கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.