6 முதல் 18 வயது வரையிலான இடைநின்ற மாணவர்களை கண்டறிய மூன்றடுக்கு குழு: கலெக்டர்கள் தலைமையில் தீவிரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 14, 2023

6 முதல் 18 வயது வரையிலான இடைநின்ற மாணவர்களை கண்டறிய மூன்றடுக்கு குழு: கலெக்டர்கள் தலைமையில் தீவிரம்

Tri-tier committee to detect dropouts between 6 to 18 years: Intensive led by Collectors - 6 முதல் 18 வயது வரையிலான இடைநின்ற மாணவர்களை கண்டறிய மூன்றடுக்கு குழு: கலெக்டர்கள் தலைமையில் தீவிரம்

தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் கண்டறிய மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மூன்றடுக்கு குழு அமைத்து வழிகாட்டுதல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1முதல் 12ம் வகுப்பு வரையில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து குடும்ப சூழ்நிலையா? இடம்பெயர்ந்ததா? பொருளாதார பிரச்னையா? என்று கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவர்கள் என்று பதிவிட வேண்டும்.

அதோடு, ஐடிஐ, பாலிடெக்னிக் போன்றவற்றில் சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்க தேவையில்லாத மாணவர்கள் என்று பதிவிட வேண்டும்.

அதோடு ஒரு வாரத்தில் 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 2வாரத்தில் 6 நாட்கள் வராத மாணவர்களை வட்டார வளமையம் பயிற்றுநர் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

4 வாரத்திற்கு பிறகும் மாணவர்கள் வராவிட்டால் தலைமை ஆசிரியர்கள் பொது தரவுதளத்தில் மாணவர் வராத காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.

6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்கள் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மூன்றடுக்கு குழு அமைக்கப்பட்டு வழிகாட்டுதல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ‌ இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான செயல்பாடுகள் தொடர்பான அட்டவணையில் கூறியிருப்பதாவது: 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தனி கவனம் செலுத்த வேண்டும்.

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை துணை தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்ட மாணவர்களை தக்க வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஆண்டு முழுவதும் பள்ளி செல்லாக் மாணவர்கள் தொடர்பாக நடந்த அனைத்து நிகழ்வுகளை தொகுத்து ஆய்வு செய்ய வேண்டும்.

இதில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மூன்றடுக்கு குழு அமைத்து அது சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சேராத குழந்ைதகள், இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்கள் சார்ந்த விவரங்களை பார்த்து பிற துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநில இஎம்ஐஎஸ் குழு, மாநில குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோரின் பணிகள் தொடர்பாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.