ஓய்வூதியர் நேர்காணல் தொர்பாக ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குதுறை சென்னை அவர்களின் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 30, 2023

ஓய்வூதியர் நேர்காணல் தொர்பாக ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குதுறை சென்னை அவர்களின் கடிதம்



ஓய்வூதியர் நேர்காணல் தொர்பாக ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குதுறை சென்னை அவர்களின் கடிதம் Letter from Commissioner Treasury and Accounts Department Chennai regarding pensioner interview

கருவூலம் மற்றும் கணக்குத்துறை

அனுப்புநர்

திரு.க.விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப.

கருவூலக் கணக்கு ஆணையர் பேராசிரியர் க,அன்பழகன் மாளிகை,

கால்நடை மருத்துவமனை வளாகம்,

நந்தனம், சென்னை-35.

பெறுநர்

1) அனைத்து கருவூல அலுவலர்கள்,

2) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், சென்னை.

அய்யா/அம்மையீர், ந.க. 9397/2023/உ2 நாள்: 30.06.2023

பொருள்

கருவூல கணக்குத் துறை - ஓய்வூதியர் நேர்காணல் . 2023-ம்

பார்வை

ஆண்டு புதியநடைமுறையின்படி ஆண்டு முழுவதும் (மாதாந்திர) நேர்காணல் அறிவுரைகள் வழங்குவது தொடர்பாக. அரசாணை நிலை எண்.165 நிதி (ஓய்வூதியம்)த்துறை நாள் 31-05-2023

பார்வையில் கண்டுள்ள அரசாணையின்படி மார்ச் 2023 வரையிலான ஓய்வூதியர்கள் (civil) பணி ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஓய்வூதியர் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்திலும் மேலும், ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் 2023-24ம் ஆண்டிற்கு சிறப்பு நேர்வாக ஜுலை 2023 மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியர் நிதியாண்டின் நேர்காணல் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதால் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியர்கள் / குடும்ப (ம) சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2024ம் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்று மூலமாக ஓய்வூதியர்கள் நேர்காணல் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பின்வரும் ஏதேனும் ஒரு சேவையினை பயன்படுத்தி இணையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்து கொள்ள ஓய்வூதியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

1) இந்திய தபால் துறை வங்கியின் மூலம் ஓய்வூதியரின் இருப்பிடத்திற்கு சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்தல் ( India Post Payment Bank Door Step Services)

2) இ.சேவை / பொது சேவை மையங்களின்மூலமாக இணையதள வாழ்நாள் சான்று வழங்குதல்

3) ஓய்வூதிய சங்கத்தின் மூலம் கைவிரல் பதிவு கருவியினை ( Bio-metric Device) பயன்படுத்தில் இணையதள வாழ்நாள்சான்று வழங்குதல்

4) ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி (Jeevan Pramaan Face App) பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே Androil கைபேசி மூலம் இணையதள வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்.

மேலும், ஓய்வூதியர்கள் கருவூலத்திற்கு நேரிடையாக ஆண்டு நேர்காணலுக்கு வரும் நேர்வில் அதற்கு முன்னேற்பாடாக கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், சென்னை மற்றும் அனைத்து கருவூல அலுவலர் / உதவி கருவூல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

I ஓய்வூதியர்களுக்கு செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள்

நேர்காணலுக்கு வரும் ஓய்வூதியர்களுக்கு அவர்கள் அமரும் இடம்

தூய்மையாகவும், போதுமான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

2. போதிய குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்திடல் வேண்டும்.

3. நேர்காணலுக்கு என்றே பிரதியோகமாக சிறப்பு கவுண்டர்கள் அமைத்திட வேண்டும். 4. ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் கருவூல அலுவலங்களில் நேர்காணலில் பங்கேற்கும் போது தீடீரென உடல் நல கோளாறு ஏற்படும் நேர்வின் போது போதிய மருத்துவ முதலுதவி முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

நேர்காணல் தொடர்பாக பின்பற்றபட வேண்டிய நடவடிக்கைள்:

1. ஓய்வூதியர்கள் நேரிடையாக கருவூலத்திற்கு நேர்காணலுக்கு வருகை தரும் நேர்வில் அவர்களது ஓய்வூதிய புத்தகத்தில் அவர்களது ஓய்வூதிய நேர்காணல் மாதம் குறித்து பதிவு செய்து கொடுக்கப்பட வேண்டும்.

2 ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம் /தங்ககளுக்கு குடும்ப ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023 ம் ஆண்டிற்கான நேர்காணல் செய்து கொள்ளலாம் என்ற விபரம் ஓய்வூதியர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

3. அனைத்து கருவூலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கைவிரல் பதிவு இயந்திரம் (Bio-metric device) அனைத்தும் இயங்கும் நிலையில் உள்ளதா என்பதையும், உரிய நிறுவனத்திடம் நடப்பாண்டிற்கு புதுப்பித்தல் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

4. ஓய்வூதிய நேர்காணல் தொடர்பாக, பத்திரிக்கைகளில் செய்தியாக (Press Release) வெளியிடப்பட வேண்டும். (செய்திகுறிப்பு,இணைக்கப்பட்டுள்ளது)

5. மத்திய அரசின் இணையதளம் "ஜீவன் பிரமான்" (www.jeevanpramaan.gov.in)

மூலம் ஓய்வூதியர்கள் தங்கள் மிண்ணணு உயிர் வாழ் சான்றினை அளிக்கும் வசதி குறித்து உரிய விழிப்புணர்வினை ஓய்வூதியர்களுக்கும், ஓய்வூதியர் சங்கங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

6. IFHRMS-ல் வீட்டு முகவரி, கைபேசி எண், PAN எண்,மின்னஞ்சல் மற்றும் ஆதார் எண் உட்பட ஏதேனும் விடுப்பட்டுள்ள இனங்களுக்கு உரிய விபரங்களை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

7. தபால் மூலம் பெறப்பட்ட உயிர்வாழ் சான்றிதழ் (Life Certificate) உடனடியாக IFHRMS ல் தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும்

8. நேர்காணலின் போது, இணையதள இணைப்பு / மின்சாரமின்மை போன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இக்காரணங்களுக்காக ஓய்வூதியரை ஓய்வூதியரை காத்திருக்கவோ அல்லது மீண்டும் கருவூலத்திற்கு வரவழைக்க கூடாது.

மேற்காணும் அறிவுரைகளை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சார்நிலைக் கருவூலங்களுக்கும் தெரிவித்து 2023 ஆண்டிற்கான ஓய்வூதிய நேர்காணலை சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து கருவூல அலுவலர் / ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் (சென்னை) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒம்/-

க.விஜயேந்திர பாண்டியன்

கருவூலக் கணக்கு ஆணையர்

நகல்: மண்டல இணை இயக்குநர்,

கருவூலக் கணக்குத்துறை.

சென்னை / வேலூர் / திருச்சி/ கோயம்புத்தூர் / மதுரை / திருநெல்வேலி

உரிய நடவடிக்கைக்காக

// ஆணைப்படி அனுப்பலாகிறது//

அன்பான ஓய்வூதியர்களுக்கு செய்திக் குறிப்பு

ஓய்வூதியர்கள் ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய குறிப்பிட்ட மூன்று மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமையாக்கு நோக்கத்தில் > சிவில் (Service Pensioners) ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும்

குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்திலும்

> பணிக்கால (Service Pensioner) ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் (Double Pensioner) தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்திலும்

இணைய தள மூலமாக மின்னனு வாழ்நாள் சான்று பதிவு செய்து 2023-2024 ம் ஆண்டிற்கான நேர்காணல் 01-07-2023 முதல் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு ஓய்வூதியர்கள் தங்களுக்குரிய மாதங்களில் நேர்காணல் செய்ய இயலாத நிலையில் நேர்காணல் மாதத்திற்கு அடுத்த மாதம் கூடுதலாக கால அவகாசமாக (Grace Period ) வழங்கப்பட்டு நேர்காணல் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் 2023-24 ம் ஆண்டிற்கு சிறப்பு நேர்வாக ஜுலை 2023 மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்ற / குடும்ப ஓய்வூதியம் துவங்கப்பட்ட ஓய்வூதியர்கள் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2024 ம் மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

இருப்பினும் ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம்/தங்ககளுக்கு குடும்ப ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023 ம் ஆண்டிற்கான நேர்காணல் செய்து கொள்ளலாம்

மேற்கண்ட நடைமுறையின்படி ஒவ்வொரு ஓய்வூதியர்களுக்கு தாங்கள் எந்த மாதம் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணல் மாதம் குறித்து தெரிந்துக்கொள்ள www.karuvoolam.tn.gov.in என்ற இனையதளத்தின்( Home screen Page ) முகப்பு திரையில் ( Pensioner Mustering ) ஓய்வூதியர் நேர்காணல் என்கின்ற இணைப்பினை(Click) கிளிக் செய்து தங்களது ஓய்வூதிய கொடுப்பாணை எண் ( PPO Number ) மற்றும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களது பெயர், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் தங்களது ஓய்வூதிய நேர்காணல் மாதம் தொடர்பான விபரங்கள் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது,

எனவே, ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இணையதளம் மூலமாக மின்னனு வாழ்நாள் சான்று பதிவு செய்து நடப்பாண்டிற்கான (2023-2024) நேர்காணல் செய்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) ஜீவன் பிரமான் இணைய தள மின்னனு வாழ்நாள் சான்றிதழ் இந்திய தபால் துறை வங்கி சேவையின் பயன்படுத்தி (அல்லது)

2) இ.சேவா / பொது சேவை நிறுவனத்தின் மூலமாக (அல்லது)

3) ஓய்வூதியர் சங்கங்களின் சேவையை பயன்படுத்தி (அல்லது)

4) ஆண்ட்ராய்டு கைபேசியில் "ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலியை “ பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்

1) ஆதார் அடையாள அட்டை

2) ஓய்வூதிய கொடுப்பாணை எண் (PPO Number)

3) வங்கிகணக்கு எண்

4) ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் பெயர் (Name of the Treasury)

2) வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் தபால் மூலம் செய்துகொள்ளலாம், வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்: மேற்கண்ட இணையதள முகவரியிலிருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர் / மாஜிஸ்ரேட் / நோட்டரிபப்ளிக் அலுவலரிடம் வாழ்வுநாள் சான்று (Life Certificate) பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம்.

3) நேரிடையாக கருவூத்திற்கு வருகை (Direct Mustering)

மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தக;ம், ஆதார் அடையாள அட்டை மற்றம் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் உரிய மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10-00 மணி முதல் பிற்பகல் 2-00 மணி வரை தொடர்புடைய ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம் ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் கருவூல கணக்குத்துறை ஆணையரகத்திற்கு தொலைபேசி / மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்

கருவூல கணக்குத்துறை ஆணையரகம்,

பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை, 3வது தளம், நந்தனம், சென்னை-600 035 மின்னஞ்சல் dta.tn@nic.in கட்டணமில்லா தொலைபேசி எண்கள் (Toll free Numbers)

18005995100

1) 9444674662

2) 9444316043

3) 9444574706

ஒப்பம்/-

கருவூலக் கணக்கு ஆணையர்

குறிப்பு - கருவூலத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு மட்டுமே மேற்கண்ட நடைமுறைப்பின்பற்றபடுகிறது. எனவே, தமிழ்நாடு மின்வாரியம், உள்ளாட்சி / நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் மற்றும் இதர நிறுவனத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது

Press Release Dear Pensioners, The process of Mustering has been undertaken in the Treasury in the specific month of July, August and September every year and the pensioners are coming to Treasury in huge number and has to wait for long time for mustering. In order to avoid such hardships to pensioners, the stipulated month of July, August and September was relaxed by new procedure and requested to do their mustering by furnishing Digital Life Certificate as detailed below

> Civil pensioners can muster in the month of their retirement

> Family pensioners / Special category Pensioners can muster in the month of commencement of their pension

> Pensioners drawing both Civil and Family Pension (Double Pensioner) can muster in the month of their retirement.

The pensioners those who are unable to muster within the due month of mustering as furnished above, succeeding month of the due month will be allowed as Grace period for mustering. Further, the pensioner due for mustering in April, May, June shall be mustered in the month of July as a special case for the year 2023-2024 and pensioner those who are due for mustering in the month January, February and March shall be mustered in the month of January, February and March 2024.

However, if the pensioners / Family Pensioners/Special Category Pensioners did not remember their Date of retirement and Date of the Commencement of their pension, they are requested to do their mustering in any month which is convenient to them for the year 2023.

Further message have been sent to the pensioner informing the due month of their mustering by sending SMS to their mobile number and the pensioners are also requested to furnish the PPO Number and Aadhar Number by click the link " Pension Mustering Status" which shows in the Home Page of the www.karuvoolam.tn.gov.in to know their due month of their mustering.

Hence, the Pensioners are requested to do their mustering for the year 2023-23 by furnishing Digital Life Certificate by make use of any one of the following method

I-Digital Life Certificate (DLC) through Jeevan Pramaan Portal:

a) Pensioners can utilizing the door step services provided by the India Post Payment Bank (IPPB)

b) Pensioners can utilizing the services of e-Sevai Centre / Common Service Centers (CSC)

c) Pensioners can utilize the Services Pensioner's Associations by make use of biometric device

d) Pensioners can do their annual mustering by using the Jeevan Pramaan 'face app' through their Android Mobile by staying their home itself.

To submit the Digital Life Certificate (DLC) pensioners have to furnish the following details.

1) Aadhaar Number

2) Pension Pay Order Number (PPO NO)

3) Bank account Number

4) Name of the Treasury in which the Pensioners is drawing their Pension. II - Life Certificate in the prescribed format issued by the officer concerned which has to be send by Post to the Treasury concerned

Pensioners residing in foreign countries

Pensioners residing in foreign countries can download the life certificate form from "www.tn.gov.in/karuvoolam" and get the signature of Indian embassy / Magistrate / Notary Public and send it to the treasuries concerned by Post.

Ill-Direct Mustering (Physical Appearance):

Further if the Pensioners are willing for direct mustering then, they can come to concerned Treasuries / Sub Treasuries / Pension Pay Office, Chennai during any one of working day (between 10.00 AM to 2.00 PM) in the respective month of their mustering along with Pension Payment Order, Aadhaar Card, Bank Pass Book.

If the Pensioners having any grievances regarding mustering which may be intimated to Commissionerate of Treasuries and Accounts through Telephone / E-mail.

Commissionerate of Treasuries and Accounts

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai, No.571, Chennai-35.

E_Mail address dta.tn@nic.in Toll Free Numbers - 1800 599 5100

1) 9444674662

2) 9444316043

3) 9444574706

Commissioner of Treasuries and Accounts

Note: The above procedure shall be applicable only to the Tamil Nadu State

Government pensioners those who are drawing pension through Treasury.

It is not applicable to Electricity Board, Local Bodies, Municipality and Corporation Pensioners etc. CLICK HERE TO DOWNLOAD கருவூலம் மற்றும் கணக்குதுறை ஆணையர் கடிதம் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.