தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - தேதி: 24.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 24, 2023

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - தேதி: 24.06.2023

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - தேதி: 24.06.2023


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*மாநில மையம்* *நாள்:24.06.2023*

*******

*ஆசிரியர் சங்கங்களுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கலந்துரையாடல்!*

*TNPTF மாநில நிர்வாகிகள் பங்கேற்பு! கோரிக்கைகள் சமர்ப்பிப்பு!* ******* *தமிழ்நாடு அரசின் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆதியோர் தலைமையில் இன்று(24.06.2023) சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் தொடக்கக்கல்வி நிலையிலான ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் காலை 9.30 மணி முதல் நடைபெற்றது.*

*இந்நிகழ்வில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் உட்பட பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.*

*இந்நிகழ்வின் போது ஒவ்வொரு ஆசிரியர் சங்கத்தையும் தனித்தனியே அழைத்து, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே நேரடியாக, அவர்களது கோரிக்கை மனுவைப் பெற்று அதில் உள்ள கோரிக்கைகளை ஒவ்வொன்றாகப் படித்து அக்கோரிக்கைகள் தொடர்பாக உடனிருந்த பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் இயக்குநர்களுடன் விவாதித்தது குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது.*

*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அளித்த மனுவில் இடம்பெற்ற 38 கோரிக்கைகளையும் ஒவ்வொன்றாகப் படித்து அதில் சில கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடியதும்,சில கோரிக்கைகள் தொடர்பாக நம்மோடு விவாதித்ததும், அதன்மீது கூடுதல் விவரங்களைக் கேட்டு அறிந்ததும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருந்தது.* *பொதுவாக ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் கூட்டமாக அமர வைத்து, கோரிக்கைகள் தொடர்பாக சங்கத் தலைவர்களை பொதுக்கூட்டத்தில் பேசுவதைப் போல பேசவிட்டுக் கலைந்து செல்லாமல், ஒவ்வொரு சங்கத்தையும் தனித்தனியே அழைத்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே நேரடியாக கோரிக்கைகளை நுணுக்கமாகக் கேட்டு அறிந்ததும், அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளக் கூறியதும், பள்ளிக்கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்றதும், இந்நிகழ்வு பெயரளவுக்கு நடத்தப்பட்டது அல்ல என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுக்கள்!*

*கலந்தாலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட 38 கோரிக்கைகள் அடங்கிய மனு pdf வடிவில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*

*இந்நிகழ்வைத் தொடர்ந்து இன்று (24.06.2023) மாலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு G. சங்கரன் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தகுதித் தேர்வு தொடர்பாக டிட்டோஜாக்கில் இணைந்துள்ள சங்கங்களின் சார்பிலும், அவற்றின் உறுப்பினர்கள் சார்பிலும் தொடுக்கப்பட உள்ள மேல்முறையீட்டு வழக்குத் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மேலும்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வழக்கில் இணையும் மேலும் 8 ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலும் வழங்கப்பட்டது. வழக்குத் தொடர ஏற்கனவே TNPTF சார்பில் அளிக்கப்பட்டுள்ள 92 பேருடன் தற்போது அளிக்கப்பட்டுள்ள 8 பேரும் சேர்த்து TNPTF சார்பில் மட்டும் 100 பேர் கொண்ட பெயர்ப் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது என்பதைத் தகவலுக்காகத் தெரிவித்துக் கொள்கிறோம்.* *மேற்கண்ட இரண்டு முக்கிய நிகழ்வுகளிலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் தோழர் மூ. மணிமேகலை, பொதுச்செயலாளர் தோழர் ச.மயில், மாநிலப் பொருளாளர் தோழர் ஜீ.மத்தேயு ஆகியோர் பங்கேற்றனர்.*

*******

*தோழமையுடன்* *ச.மயில்*

*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.