RBI Junior Engineer Recruitment 2023: ஜூனியர் இன்ஜினீயருக்கு ரூ.71 ஆயிரம் ஊதியத்தில் வேலை? - கடைசி தேதி - 30.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 19, 2023

RBI Junior Engineer Recruitment 2023: ஜூனியர் இன்ஜினீயருக்கு ரூ.71 ஆயிரம் ஊதியத்தில் வேலை? - கடைசி தேதி - 30.06.2023

RBI Junior Engineer Recruitment 2023: ஜூனியர் இன்ஜினீயருக்கு ரூ.71 ஆயிரம் ஊதியத்தில் வேலை?

ஆர்.பி.ஐ.,யின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் காலியாக உள்ள 35 சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் ஜூனியர் இன்ஜினீயர் பதவிகளுக்கு, தகுதியான நபர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாகம்: இந்திய ரிசர்வ் வங்கி

மேலாண்மை: மத்திய அரசு

பணி விவரம்

ஜூனியர் இன்ஜினீயர் (Junior Engineer (Civil/Electrical)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 35

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், குறைந்தபட்சம் மூன்றாண்டு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். பணிக்கு ஏற்ற முன் அனுபவமும் அவசியமாகும். வயது வரம்பு

Ø காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.06.2023 அன்று 28-30 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடி வகுப்பினர் ஐந்து ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ø விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4270, https://ibpsonline.ibps.in/rbijemay23/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற வலைதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Ø விண்ணப்பங்கள் துவங்கிய நாள் ஜூன்.9

Ø விண்ணப்பங்கள் செயல்முறை ஜூன் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

Ø அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தேர்வு முறை

எழுத்து தேர்வு, மொழி திறன் தேர்வு ஆகியவற்றின் வாயிலாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப கட்டணம்

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கட்டணமாக ரூ.450 செலுத்த வேண்டும். பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50 மட்டும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைன் தேர்வுக்கான தேதி பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிப்பை பதிவிறக்கம் செய்யும் முறை

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான @ rbi.org.in பார்வையிடவும்

காலியிடங்கள்(Vacancies) பகுதிக்கு செல்லவும்.

v ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர் (சிவில்/எலக்ட்ரிக்கல்) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின் உள்ளே செல்லவும்.

v தகுதி நிலையை முழுமையாக படித்து பார்க்கவும்.

v ஆன்லைன் இணைப்பை கிளிக் செய்யவும்.

v ஆன்லைன் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.

v கொடுக்கப்பட்ட தகவலை ஒருமுறை மீண்டும் சரிபார்க்கவும்.

v பின்னர் விண்ணப்பக் கட்டணத்துடன் ஆன்லைன் படிவத்தைப் பதிவேற்றவும்.

v எதிர்கால தேவைக்காக பூர்த்தி செய்து சமர்ப்பித்த விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அடிப்படை ஊதியமாக மாதத்திற்கு ₹33,900/- வழங்கப்படும். வீட்டுப்படி உள்ளிட்ட இதர படிகள் சேர்த்து, தற்போது, ஜூனியர் இன்ஜினியருக்கு (சிவில்/எலக்ட்ரிக்கல்) ஆரம்ப மாதாந்திர மொத்த ஊதியம் தோராயமாக ₹71,032/ பெறுவர். முழு விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.