ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 13, 2023

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 13: சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசி ரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வித் துறையிடம் முன் அனு மதி பெற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட் டம், சாத்தான்குளம் புனித ஜோசப் பெண் கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-இல் இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டார்.

இவரது நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி பள்ளி நிர்வா கம் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைக்கப்பட் டதன் பேரில், 2017-இல் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஜேசுபிரபா தனது பணி நியமனத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அங்கீகரித்து, ஊதியப் பாக்கி,பணப்பலன்களை வழங்கக் கோரி வழக்குத்தொடுத் தார்.

அப்போது, அவரது பணி நியமனத்தை 2014-ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறையின் செயலர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ஆர். தாரணி ஆகியோர்.

அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசி ரியர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்ப டுகிறது.

இதுபோன்ற பணி நியமனங்கள் அந்தந்த மறை மாவட்டங்கள்பராமரித்து வரும் பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ் வொரு மறை மாவட்டங்களும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு இணையாக பதிவேட்டை பராமரித்து வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர் கள் விவரங்களை ஆராய்ந்தால், அவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அதே மதத்தில் உள்ள ஒரு பிரிவின ராகவோ இருப்பர்.

கல்வித் துறை, உபரி ஆசிரியர் பிரச்னையைச் சந்தித்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கல்வி நிறுவனங்கள். தங் களது பள்ளியில் ஒரு காலியிடம் ஏற்பட்டால்கூடஉடனடி. யாக நிரப்பி விடுகின்றனர். அவர்கள் மற்றொரு பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டுகொள்வதில்லை. எனவே, வரும் காலங்களில் சிறுபான்மைக் கல்வி நிறுவ னங்கள், கல்வித் துறையிடம் முன்அனுமதி பெற்றே ஆசி ரியர் பணியிடங்களை திரப்ப வேண்டும்.

பணி நியமனத் துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி சிறுபான்மை கல்வி நிறுவ னம் அனுப்பும் பரிந்துரைகளை நீண்டகாலம்நிலுவையில் வைத்திருக்கக்கூடாது. அதாவது, ஆசிரியர் நியமன ஒப்புதல் தொடர்பாககல்வி நிறுவனங்களிடமிருந்து பரிந்துரை கிடைக்கப் பெற்றால் அதன் மீது 10 வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவிலும், அமர்வு உத்த ரவிலும் தலையிட வேண்டியதில்லை. மறுசீராய்வு மனு முடித்துவைக்கப்படுகிறது என்றனர் நீதிபதிகள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.