கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 29, 2023

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை சார்பில் வித்யாதன் எனும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு 11ம் மற்றும் 12ம் வகுப்புகளில் உதவித்தொகையாக ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. தகுதிகள்:

குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.

2023ம் ஆண்டின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தது 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள்.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குறைந்தது 90 சதவீத மதிப்பெண் அல்லது 9+ சி.ஜி.பி.ஏ., பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

தேவையான ஆவணங்கள்:

புகைப்படம், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் வருமான சான்றிதழ்.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித் திறன் மற்றும் விண்ணப்பப் படிவத்தில் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் ஆன்லைன் தேர்வு அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

அவற்றின் வாயிலாக தகுதியான மாணவர்கள் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31

விபரங்களுக்கு: இ-மெயில்:

vidyadhan.tamilnadu@sdfoundationindia.com

வெப்சைட்: https://www.vidyadhan.org/apply

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.