அரசு பள்ளிக்கு 8 பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 26, 2023

அரசு பள்ளிக்கு 8 பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்



அரசு பள்ளிக்கு 8 பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் - 8 graduate teachers are compulsory for government schools, Teachers' Association insists

அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் கட்டாயம் 8 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் எஸ்.சேதுசெல்வம் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் கூறியதாவது:

பழைய பென்ஷன் தேவை

பழைய பென்ஷன் திட்டம் அவசியம். பட்டதாரி ஆசிரியருக்கு பணிமூப்பு படியே உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும். உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் தகுதியில் ஒவ்வொரு மேல்நிலை பள்ளிக்கும் கூடுதலாக தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1500 ஆசிரியர்கள், தகுதி தேர்வு என்ற பெயரில் (டெட்) கடுமையாக பாதித்ததோடு, பணிவரன்முறை, சம்பள உயர்வின்றி தவிக்கின்றனர். பள்ளிக்கு 8 ஆசிரியர் கட்டாயம்

2012 நவ., 16 க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பள உரிமை தர வேண்டும். உயர்கல்வி தகுதிக்கேற்ப சம்பள உயர்வு தர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை 8 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க அனுமதிப்பதால், பட்டதாரி ஆசிரியர்களை உபரி என கணக்கிட்டு பிற பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்யக்கூடாது. உயர், மேல்நிலை பள்ளிகளில் 8 பட்டதாரி ஆசிரியர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும்.

ஆய்வால் பல கோடி ரூபாய் விரயம்

பள்ளி கல்வி அமைச்சர், செயலர், கமிஷனர் குழு ஆய்வால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதை அரசு கைவிட வேண்டும். பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பில் முழுமை பெறாத வினா, பாடத்தின் பின்னால் (புக்பேக்) இல்லாத வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கிறது. இதை தவிர்க்க சமூக அறிவியலில் 15 ஒரு மதிப்பெண், 5 மதிப்பெண் இரண்டு, 10 இரண்டு மதிப்பெண் வினா, ஒன்பது 5 மதிப்பெண் வினா, 10 மதிப்பெண் வினா 1 என்ற முறையில் வினாத்தாள் தயாரிக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.