10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் குறித்த அறிவிப்பு - தேர்வுத்துறை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 15, 2023

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் குறித்த அறிவிப்பு - தேர்வுத்துறை வெளியீடு



10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை 20.06.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு! - 10th and 11th Class Supplementary Exam Admit Card Available to Download from 20.06.2023!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன்/ஜூலை 2023 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் / அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் செய்திக்குறிப்பு நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களும் (தட்கல் உட்பட) 20.06.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று "HALL TICKET” என்ற வாசகத்தினை "Click" செய்த பின்னர் தோன்றும் பக்கத்தில் " “HSE FIRST YEAR / SSLC - JUNE/JULY 2023 SUPPLEMENTARY EXAMINATION - HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை "Click" செய்ய வேண்டும். தோன்றும் பக்கத்தில், தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப எண் (APPLICATION NUMBER) அல்லது நிரந்தரப்பதிவெண் (PERMANENT REGISTER NO) மற்றும் பிறந்த தேதியினைப் (DATE OF BIRTH) பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 22.06.2023 (வியாழக்கிழமை) முதல் 23.06.2023 வெள்ளிக்கிழமை) வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வு நடைபெறவுள்ளது. மேலும், இத்தேர்வர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.