TN Board Results - Tamil Nadu 12th Result 2023 - பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு - Result Direct Link - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 7, 2023

TN Board Results - Tamil Nadu 12th Result 2023 - பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு - Result Direct Link



பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு மாநிலம் முழுவதும் 3,324 தோ்வு மையங்களில் கடந்த மாா்ச் 13 முதல் ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவா்கள், 23,747 தனித் தோ்வா்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவா் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் போ் வரை பதிவு செய்திருந்தனா்.

அவா்களில் 8.17 லட்சம் மாணவா்கள் மட்டுமே தோ்வில் கலந்துகொண்டனா். பல்வேறு காரணங்களால் சுமாா் 48,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வில் பங்கேற்வில்லை.

சென்னையில் மட்டும் 180 மையங்களில் 42 ஆயிரம் போ் வரை தோ்வு எழுதினா். இதையடுத்து, மாணவா்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-இல் தொடங்கி 21-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

தொடா்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணியில் சுமாா் 50,000 முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகளை மே 5-ஆம் தேதி வெளியிட தோ்வுத் துறை திட்டமிட்டிருந்தது. அதன்பின் நீட் தோ்வை கருத்தில்கொண்டு பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு மே 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளாா்.

இந்த தோ்வு முடிவுகளை இணையதள முகவரிகளில் சென்று மாணவா்கள் அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தோ்வு முடிவுகளை பாா்த்துக் கொள்ளலாம்.

இதுதவிர பள்ளி மாணவா்கள், தனித் தோ்வா்களுக்கான தோ்வு முடிவுகள் அவா்கள் பதிவுசெய்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவினை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.