அரசு ஊழியர்களுக்கு இறையன்பு பிறப்பித்த முக்கிய உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 9, 2023

அரசு ஊழியர்களுக்கு இறையன்பு பிறப்பித்த முக்கிய உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு இறையன்பு பிறப்பித்த முக்கிய உத்தரவு.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இரண்டு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

விரைவில் ஓய்வுபெறவிருக்கும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்புவுக்கு மாநில தகவல் ஆணையர் உள்ளிட்ட மிக முக்கிய பதவி வழங்கப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் கசிந்து வருகின்றன.

இதற்கிடையே, தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள், கழகம் மற்றும் வாரியத் தலைவர்களுக்கும் வெ. இறையன்பு எழுதியிருக்கும் கடிதத்தில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள கரும்பலகையில், நாள்தோறும் ஒரு திறக்குறளை அதன் பொருளுடன் எழுதி வைக்க வேண்டும். மேலும், ஆங்கில அர்த்தத்துடன் கூடிய தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில அலுவலகங்களைத் தவிர்த்து மற்ற துறைகளில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும், இனிமேல் சரியாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் நாள்தோறும் ஒரு திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்துதல்- உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

https://www.kalviseithiofficial.com/2023/05/Thirukkural-and-Tamil-art-words-daily-in-all-departments.html

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.