ஆய்வு படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலைநிறுத்த வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 21, 2023

ஆய்வு படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலைநிறுத்த வலியுறுத்தல்

ஆய்வு படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலைநிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் முனைவர், இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் 325வது அறிவிக்கையின்படி, முனைவர், இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற 50சதவீத மதிப்பெண்களுக்கு மாற்றாக, பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது.

இந்த அறிவிக்கையின்படி மாணவர் சேர்க்கையில் 5சதவீத மதிப்பெண் சலுகை வழங்க ஒப்புக்கொண்டுள்ள தமிழ்நாட்டு விளையாட்டுப் பல்கலைக்கழகம், அந்த சலுகை பெற வேண்டுமானால் ஓபிசி சான்றிதழைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறது. யுஜிசி அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5சதவீத மதிப்பெண் சலுகையே வழங்கப்படுவதில்லை. இது சமூகநீதியை முற்றிலும் மறுப்பதாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.