1,330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவா்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை: தமிழ் வளா்ச்சி இயக்குநா் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 21, 2023

1,330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவா்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை: தமிழ் வளா்ச்சி இயக்குநா்

1,330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவா்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை: தமிழ் வளா்ச்சி இயக்குநா்

திருக்குறளில் உள்ள 1,330 குகளையும் ஒப்பிக்கும் பள்ளி மாணவா்களுக்கான பரிசுத்தொகை ரூ.10,000-இல் இருந்து ரூ.15,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்று தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் ஔவை ந.அருள் தெரிவித்தாா்.

சென்னைப் பல்கலைக்கழகத் திருக்கு ஆய்வு மையம், திண்டுக்கல் வளா்தமிழ் ஆய்வு மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய பத்தொன்பதாவது பன்னாட்டுக் கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஔவை ந.அருள் பேசியது: 1968 -ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு அன்றைய முதல்வா் அண்ணா தலைமையில் நடந்தது.

இதில் எஞ்சிய நிதியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் ஆகிய மூன்றிலும் திருக்கு ஆய்வு மையம் தொடங்க அண்ணா உத்தரவிட்டாா். பின்னா் கருணாநிதி ஆட்சியில் வள்ளுவா் கோட்டம், திருவள்ளுவா் சிலை போன்றவற்றை அமைத்து திருவள்ளுவருக்கு பெருமை சோ்த்தாா்.

தற்போதுள்ள ஸ்டாலின் அரசு உலகத் திருக்கு மாநாட்டை பிரான்சில் நடத்த முயற்சி செய்கிறது. தமிழ் வளா்ச்சித் துறையின் எல்லாக் கடிதங்களிலும் திருவள்ளுவா் ஆண்டு எழுதப்பட்டிருக்கும் அவா்.

கருத்தரங்க நூலின் முதல் பிரதியை பிராட்லைன் தொழில்நுட்ப நிறுவன நிா்வாக இயக்குநா் ஆறுமுகம் வெளியிட, அதை பேராசிரியா் ஏகாம்பரம் பெற்றுக்கொண்டாா்.

இக்கருத்தரங்கில், திண்டுக்கல் வளா்தமிழ் ஆய்வு மன்றத் தலைவா் தாயம்மாள் அறவாணன், துணைத் தலைவா் ஜெ.அமலாதேவி, செயலா் சி.மைக்கேல் சரோஜினிபாய், சென்னைப் பல்கலைக்கழகத் திருக்கு ஆய்வு மையத் தலைவா் வாணி அறிவாளன், பதிவாளா் ஏழுமலை,பேராசிரியா் ஆ.ஏகாம்பரம், காந்திய சிந்தனைக் கல்லூரி முதல்வா் சு.முத்துலக்குமி, அமெரிக்கன் கல்லூரியின் இணைப் பேராசிரியா் ஆ.பூமிச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.