தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 5, 2023

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 8 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும் என அறிவிப்பு...

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டண விவரம்

(ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்) விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/- பதிவுக் கட்டணம் - ரூ.2/-

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும்

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card CreditCard/ Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai - 15" என்ற பெயரில் 08/05/2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நோடியாகவும் செலுத்தலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் - 08.05.2023

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் - 19.05.2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.