வித்யாதன் கல்வி உதவித்தொகை - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 23, 2023

வித்யாதன் கல்வி உதவித்தொகை - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

2023 - ல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

வித்யாதன் பற்றி:

வித்யாதன் கல்வி உதவித்தொகை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டைளையின் மூலமாக கொடுக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற திறனாய்வு தேர்வுக்கு உட்படுத்தபடுவார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். உதவித்தொகை பெறும் மாணவர்கள் வரும் கல்வியாண்டில் நல்ல மதிப்பெண் பெற்றால் அடுத்து அவர்கள் விரும்பும் மேற்படிப்புக்கும் உதவப்படும். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், கோவா, ஒடிசா, புது டெல்லி, லடாக், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தற்போது 6500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். புதுச்சேரி வித்யாதன் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த உதவித்தொகை அறக்கட்டைளையின் மூலமாகவும் வெளிப்புற ஆதரவாளர்கள் மூலமாகவும் கொடுக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை 10,000 முதல் 60,000 வரை மாநிலம், படிப்பு மற்றும் படிக்கும் காலத்திற்கு தகுந்தாற் போல் வேறுபடும். தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்கள் வித்யாதன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். வித்யாதன் கல்வி உதவித்தொகை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டைளையின் மூலமாக கொடுக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற திறனாய்வு தேர்வுக்கு உட்படுத்தபடுவார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெற உதவித்தொகை பெறும் மாணவர்கள் வரும் கல்வியாண்டில் நல்ல தகுதியுடையவர்கள்.

உதவித்தொகை மதிப்பெண் பெற்றால் அடுத்து அவர்கள் விரும்பும் மேற்படிப்புக்கும் உதவப்படும். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், கோவா, ஒடிசா, புது டெல்லி, லடாக், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தற்போது 6500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

புதுச்சேரி வித்யாதன் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த உதவித்தொகை அறக்கட்டைளையின் மூலமாகவும் வெளிப்புற ஆதரவாளர்கள் மூலமாகவும் கொடுக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை 10,000 முதல் 60,000 வரை மாநிலம், படிப்பு மற்றும் படிக்கும் படிக்கும் காலத்திற்கு காலத்திற்கு தகுந்தாற் போல் வேறுபடும்.

தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்கள் வித்யாதன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:-

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளையின் மூலம் ‘வித்யாதன்’ திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று பிளஸ்-1 சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் ,

மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

உதவி தொகை:-

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 11, 12-ம் வகுப்புகளில் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

அந்த வகுப்புகளிலும் சிறந்த மதிப்பெண் பெறுபவர்களுக்கு பட்டப்படிப்பை தொடர ஆண்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க:-

www.vidyadhan.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:-

தமிழ்நாடு மாணவர்கள்

vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்,

புதுச்சேரி மாணவர்கள் vidyadhan.puducherry@sdfoundationindia.com என்ற

மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம். அல்லது

73396 59929,

87924 59646 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்க:-

Download Notification PDF

CLICK HERE

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.