அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் - புதியன விரும்பு 2023 - உதக மண்டலத்தில் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 22, 2023

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் - புதியன விரும்பு 2023 - உதக மண்டலத்தில் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு!



SUMMER CAMPS FOR PUBLIC SCHOOL STUDENTS - NEW WANTED 2023 - STATE PROGRAM DIRECTOR'S PRESS NOTE Dependent on Utaka Mandal - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் - புதியன விரும்பு 2023 - உதக மண்டலத்தில் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கல்வி என்பது ஒருவருக்கு ஏட்டுக்கல்வியாக மட்டும் இருக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டில் இருக்கும் பள்ளிக் கல்வித் துறை மாணவர்களுடைய ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் பல புதிய திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக உதகமண்டலத்தில் சென்ற ஆண்டு 'புதியன விரும்பு என்கிற பெயரில் ஒரு முகாம் நடைபெற்றது. இந்தக் கோடை முகாமில் அவர்களுடைய கலைகளையும் இலக்கியவாசிப்பையும் வளர்த்துக் கொள்வதற்கான அமர்வுகள் நடந்தேறின. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் உதகமண்டலத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென புதியன விரும்பு- 2023 என்கிற பெயரில் கோடை முகாம் நடக்கவிருக்கிறது அதில் 14 கலை வடிவங்களும் கதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களையும் மாணவர்கள் கற்றுக் கொள்ளவிருக்கின்றனர் மேலும் பல்வேறு ஆளுமைகளும் இம்முகாமில் கலந்துகொண்டு மாணவர்களோடு உரையாற்றவிருக்கின்றனர்.

இந்த முகாமின் தொடக்க விழா 23.5.2023 அன்று காலை 9 மணிக்கு உதகமண்டலத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் நடைபெற உள்ளது,

பள்ளிக் கல்வித் துறைக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு, காகர்லா உஷா இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடக்கும் தொடக்க விழாவில் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றுகிறார் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். விழாவில் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கா. ராமச்சந்திரன் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ. ராசா அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர். கணேஷ். கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன்.ஜெயசீலன் ஆகியோர் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர். நிகழ்வுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு. சா.ப.அம்ரித் இ.ஆ.ப. அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார். இந்த முகாம் எதற்காக நடத்தப்படுகிறது என்கிற நோக்கவுரையையும் வரவேற்புரையையும் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் சங்கத்தின் உறுப்பினர் செயலர் இரா. சுதன் ஐ.ஏ.எஸ்(ஓய்வு) அவர்கள் வழங்கவிருக்கிறார். முகாமின் தொடக்க விழாவிற்கு தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளர்களை அனுப்பி செய்து சேகரிக்குமாறு வேண்டுகிறோம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.