RTE - கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 25, 2023

RTE - கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்

கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல். RTE – Problem of enrolling students in Right to Education Act

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், மாணவர்களை நிரப்ப முடியாமல், பள்ளி நிர்வாகங்கள் திணறுகின்றன.

இந்த சட்டத்தின் கீழ், அந்தந்த பள்ளிகளில் இருந்து ஒரு கி.மீ., தொலைவிற்குள் வசிக்கும் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில், கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களை ஒட்டிய ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளிலும், ஒரு கி.மீ., சுற்றளவில், மாணவர்களை சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை முழுமையடையாத நிலையில், இவ்விவகாரத்தில் தலையிட்ட கல்வித்துறை, 'விண்ணப்பிக்கும் மாணவர்கள், 3 கி.மீ., சுற்றளவில் இருந்தால் கூட, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்த்துக் கொள்ளலாம்' என வாய்மொழி உத்தரவிட்டனர். அதனடிப்படையில் பெரும்பாலான பள்ளிகள் மாணவர்ளை சேர்த்தன. ஆனால், நடப்பு கல்வியாண்டில் திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 'ஒரு கி.மீ., சுற்றளவிற்குள் உள்ள மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்' என, அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதால், மாணவர்களை சேர்க்க முடியாமல், தனியார் பள்ளிகள் திணறுகின்றன.

அதே நேரம், இச்சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க விரும்பாத பள்ளிகள், எல்லையை காரணங்காட்டி, விண்ணப்பங்களை நிராகரித்து விடுகின்றன.

'இந்த குழப்பத்துக்கு தீர்வு காண கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோரும், பள்ளி நிர்வாகங்களும் விரும்புகின்றன.

*நிலுவையில் கல்விக்கட்டணம்.*

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு, அந்த மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தை அரசே வழங்கி விடுகிறது.

அந்தந்த கல்வியாண்டின் இறுதியில், கல்விக் கட்டணம் வழங்கப்பட்டு விடும் என்ற நிலையில், கடந்த இரு ஆண்டாக கட்டணம் கிடைக்கப்பெறவில்லை என, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.