மேல்நிலை இரண்டாம் ஆண்டு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) 08.05.2023 09.45 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
2022-2023 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 08.05.2023 (திங்கட்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 08.05.2023 அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) முற்பகல் 945 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும், அதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.