10, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வு அறிமுகம்: CBSE - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 12, 2023

10, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வு அறிமுகம்: CBSE

10, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வு அறிமுகம்: சிபிஎஸ்இ

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணைத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் 2 பாடங்களிலும், 12ம் வகுப்பில் ஒரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வு எழுதலாம் என சிபிஎஸ்இ  தெரிவித்துள்ளது.

நாடு முழவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகின. இந்த ஆண்டு  சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 1.28 சதவீகிதம் குறைவாகும்.

பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வை 21.86 லட்சம் மாணவர்கள் எழுதினர். 12 ஆம் வகுப்பைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து பொதுத் தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 87.33 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 5 சதவீகிதம் குறைவாகும்.

இந்த ஆண்டு முதல் முறையாக, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை வெளியிடாமல் தவிர்த்துவிட்டது சிபிஎஸ்இ நிர்வாகம். அதேவேளையில், நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.