10th, 11th பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் மற்றும் துணைத்தேர்விற்கு விண்ணப்பித்தல் - செய்திக்குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 21, 2023

10th, 11th பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் மற்றும் துணைத்தேர்விற்கு விண்ணப்பித்தல் - செய்திக்குறிப்பு



பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு (1) பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் செய்திக்குறிப்பு

பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு (1) பொதுத்தேர்வுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியலை 26.05.2023 (வெள்ளிக்கிழமை) முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரும் மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலும், 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் கோரும் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலும் 24,05,2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய -பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி துணைத்தேர்வு 27.06.2023 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service centres) வாயிலாகவும் 23.05.2023 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 12.00 மணி முதல் 27.05.2023 (சனிக் கிழமை) மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்நாட்களில் விண்ணப்பிக்கத்தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 30.05 2023 (செவ்வாய்க் கிழமை) மற்றும் 31.05.2023 (புதன் கிழமை) ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்புத் தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500/-

> மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/- இணைப்பு : பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கால அட்டவணை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.