சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அங்கன்வாடிப் பணிகள் கோடை விடுமுறை - மே மாதம் 10 ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் முடிய 15 நாட்களுக்கு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்குதல் ஆணை
ஆணை:-
மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாட்டில் அங்கன்வாடிப் பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாவது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மூன்றாம் வாரமும், குறு அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு நான்காவது வாரமும் கோடை விடுமுறை வழங்கியும், அவ்வாறு அங்கன்வாடி மையங்களில், கோடை விடுமுறை வழங்கப்படும் மே மாதத்தின் இரண்டாவது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களும் மூன்றாவது வாரம் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் நான்காவது வாரம் அருகிலுள்ள குறு அங்கன்வாடி மையங்களில் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் உணவூட்டும் பணிகளை எவ்விதமான இடையூறுமின்றி நிறைவேற்றும்படியும், அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கும் போது உணவூட்டும் பணிகளை மாற்று ஏற்பாட்டுடன் மேற்கொள்ளும்போது அங்கன்வாடி மையங்கள், அரசின் கொள்கை முடிவின்படி வருடம் முழுவதும் இயங்குவதை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை ' 2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வனார்ச்சிப் பணிகள். இயக்குநர் மற்றும் குழும் இயக்குநரின் கடிதங்களில் குழந்தைகள் மையங்கள் வழக்கமாக செயல்படும் நாட்களில் முன்பருவக் கல்வி மூலம் பயன்பெறும் 2 வயது முதல் 6 வயது வரையுள்ள குழத்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல் வரையறுக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கான 500 கிலோ கலோரி மற்றும் 12 கிராம் புரதச்சத்தினை ஆண்டில் 300 நாட்களுக்கு வழங்கும். வகையில் 50 கிராம் சத்துமாட சமைத்த உணவு முட்டை, பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்குவதன் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார். மேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. 3. மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள். இயக்குதர் மற்றும் குழும இயக்குநரின் கடிதங்களில் தற்போது அங்கன்வாடிப் பணியாளர்களின் தொடர் கோரிக்கையினையும், அதிக கோடை வெப்பத் தாக்கத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள இயலாத சூழ்நிலையில் மே மாதம் 15 நாட்கள் குழத்தைகள் மையங்களுக்கு விடுமுறை அணிக்கும் நேர்வில் மேற்சொன்ன அனைத்து உணவுகளையும் மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு வழங்க இயலாது சான்பதாலும். சமைத்த உணவிற்கு பதிலாக உலர் உணவு பொருட்களை (Raw ration) பயனாளிகளுக்கு வழங்கக் கூடாது என மைய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும், 'ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் பயன்படுத்த தயாராக உள்ள உணவு (Ready to Uso Therapoutic) ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் இதர சுகாதார கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், கோடை விடுமுறை வழங்கப்படவுள்ள நாட்களுக்கு மேற்கண்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்தினை முற்றிலுமாக தவிர்ப்பதை விட தற்போது அவர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினையே வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில் வழங்ககாம் என்றும் தெரிவித்துள்ளார்.
4. ஆகவே, கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகை பாதுகாக்கும் நோக்கில் மே மாதம் 15 நாட்கள் (மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை) குழந்தைகள் மையங்களுக்கு விடுமுறை வழங்கவும், மேற்கண்ட காலங்களுக்கு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கவும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பயனாளிகளுக்கு உயர் உணவு (Raw ration) வழங்க வழிவகை இல்லை என்பதால், 2 முதல் 6 வயதுக்குட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினையே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான 15 நாட்களுக்கான 750 கிராம் சத்துமாவை வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் (THR) மே மாதம் 9-ஆம் நாள் பயனாளிகளுக்கு வழங்க அனுமதிக்க வேண்டியும், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் தனது கடிதங்களில் கேட்டுக் கொண்டுள்ளார். 5. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலித்து, அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது.-
i முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணை இவ்வாண்டிற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
தடப்பாண்டில் மே மாதம் 10ஆம் நாள் முதல் 24-ஆம் நாள் முடிய 15 நாட்களுக்கு அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மைய அரசின் நெறிமுறைகளின்படி அங்கன்வாடிப் பணிகளின் கீழ் இணைஉணவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாலும் உயர் உணவுப் பொருட்கள் வழங்க வழிவகை இல்லை என்பதாலும் மேற்கண்ட கோடை விடுமுறைக் காலங்களுக்கு 2 முதல் 6 வயதுக்குட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் மையக் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமானை கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர், வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் (THR) மேற்கண்ட பயலானிகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. . மே மாதம் 50 சதவிகிதம் குழந்தைகள் மட்டுமே மையங்களுக்கு வருகை புரிவதாக ஒருங்கிணைந்த குழந்தை வார்ச்சிப் பணிகள். இயக்குநர் மற்றும் குழும் இயக்குநர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் அந்த அளவிற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் தேவை ஏற்படின் அதுகுறித்து தனியே பரிசீலிக்குமாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள். இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.