IGNOU பல்கலை.,யில் 200 ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் பணி - கடைசி நாள்: 20.04.2023. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 14, 2023

IGNOU பல்கலை.,யில் 200 ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் பணி - கடைசி நாள்: 20.04.2023.



இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை.,யில் 200 ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட்

புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் 200 ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Junior Assistant Cum Typist.

மொத்த இடங்கள்: 200 (பொது-83, எஸ்சி-29, எஸ்டி-12, ஒபிசி-55, பொருளாதார பிற்பட்டோர்-21). சம்பளம்: ரூ.19,900- 63,200. வயது வரம்பு: 18 முதல் 27க்குள். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் விதிமுறையின்படி தளர்வு அளிக்கப்படும்.தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இந்த காலியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் Archery/Athletics/Atya-Patya/ Badminton/ Ball-Badminton/ Basket ball/ Billiards and Snooker/ Boxing/ Bridge/Carrom/Chess/Cricket/ Cycling/Equestrian Sports/Football/ Golf/Gymanstics (including Body Building)/Hand ball/Hockey/ Ice-skiling/Ice-Hockey/ Ice-Skatiing/ Judo/Kabaddi/Karate-DO/ Kayaking and Canoeing/Kho-Kho/Polo/Power Lifting/Rifel Shooting/Roller Skating/Rowing/Softball/ Squash/Swimming/ Table Tennis/Taekowndo/Tenni-Koit/ Tennis/ Volley Ball/Weighlifting/ Wrestling/Yatching ஆகிய விளையாட்டுக்கள் ஏதாவது ஒன்றில் தேசிய/ மாநில/பல்கலைக்கழக அளவிலான போட்டியில் பங்கு பெற்று விளையாடிதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹1000/-. எஸ்சி/எஸ்டி/ பெண்களுக்கு ₹600/-. மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, டைப்பிங் திறன் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

www.ignou.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.04.2023.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.