NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு - மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 7, 2023

NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு - மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம்

NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு - மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம்

25.02.2023 அன்று நடைபெற்ற NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) www.dge.tn.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த பிப்.25-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது அந் தத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத்திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசுபள் ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயி லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம் எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங் கப்படும்.

நிகழாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த பிப்.25- ஆம் தேதி நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் 847 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 2 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் ஆர் வமுடன் எழுதினர்.

இந்நிலையில், தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர் வுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதை மாணவர்கள் www.dge1.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன் விவ ரங்களை உரிய ஆவணங்களுடன் மார்ச் 14-ஆம் தேதிக்குள் dgenmms@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள் ளது.



NMMS ANS KEY - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.