எனது தலையை துண்டித்தாலும் அகவிலைப்படி உயர்த்த முடியாது - அரசு ஊழியர்களிடம் மே.வ., முதல்வர் ஆவேசம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 7, 2023

எனது தலையை துண்டித்தாலும் அகவிலைப்படி உயர்த்த முடியாது - அரசு ஊழியர்களிடம் மே.வ., முதல்வர் ஆவேசம்

எனது தலையை துண்டித்தாலும் அகவிலைப்படி உயர்த்த முடியாது - அரசு ஊழியர்களிடம் மம்தா ஆவேசம்

மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை (டிஏ) உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இது தொடர்பாக பேசியதாவது: அரசு ஊழியர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு ஏற்கெனவே 105 சதவீத டிஏ வழங்கி வருகிறது. இதற்கு மேல் மாநில அரசால் வழங்க முடியாது. உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் எனது தலையை துண்டிக்கலாம். பாஜக ஆளும் உ.பி. மற்றும் திரிபுராவில் டிஏ உயர்வு வழங்கப்படவில்லை. @kalviseithi

மாநில அரசு முடிந்த அளவு டிஏ வழங்கி வருகிறது. டிஏ வழங்குவது கட்டாயமில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் வேறுபட்டவை. மாநில அரசு ஊழியர்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கிறது. மே.வங்கத்தில் ரிசர்வ் வங்கி உள்ளதா என்ன? மத்திய அரசிடமிருந்து நாம் இன்னும் ஒரு லட்சம்கோடியை பெறவில்லை. வானத்திலிருந்து பணம் விழாது. அரசு ஊழியர்கள் வெளிநாடு சுற்றுலா செல்ல நான் வாய்ப்பு அளித்துள்ளேன். இவ்வாறு மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.