கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த ஆசிரியர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த ஆசிரியர்கள்

கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த ஆசிரியர்கள் - Teachers who worked wearing black band

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் பணிபுரிந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழ நம்பியூர் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் படி தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை நடைபெற்று கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலே நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ரஹமத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகளும், அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். புதுக்கோட்டையில் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.