1-3 வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடர்பான செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

1-3 வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடர்பான செயல்முறைகள்

1-3 வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடர்பான செயல்முறைகள்

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 17.04.2023 முதல் 21.04.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தொகுத்தறி மதிப்பீடு எழுத்துப்பூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் PDF வடிவிலான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாட்கள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம்) ஆசிரியர்களின் எண்ணும் எழுத்தும் செயலியிலேயே பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்படும் செயலி வாயிலாக மாணவர்களுக்கு மதிப்பீடு முடித்த பிறகு முறையே தமிழ். ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டினை எழுத்துப்பூர்வமாக நடத்திக் கொள்ளலாம். இந்த PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாவினை தவிர ஆசிரியர் விரும்பும் வகையில் தொகுத்தறி வினாத்தாளை வடிவமைத்து விருப்பத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான இறுதி கட்டகத்திற்கான வளற்றி மதிப்பீடு FA(b)-யினை 13.04.2023-க்குள் முடிக்குமாறும், மேலும். வளறறி மதிப்பீடு FA(a)-க்கான மதிப்பீட்டினை செயலியில் 21.04.2023-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. எனவே, மூன்றாம் பருவத்திற்கான வளற்றி மதிப்பீடு FA(8), FA(b) மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டினை அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மேலே குறிப்பிட்ட நாட்களில் நடத்திட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.