பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இன்று (4.3.2023) தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆசிரியர்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 4, 2023

பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இன்று (4.3.2023) தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆசிரியர்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவிப்பு



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை, பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இன்று (4.3.2023) சந்தித்து ஆசிரியர்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (4.3.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழகத் தமிழாசிரியர் கழகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றங்கள், ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர் நலக் கூட்டமைப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு இயக்கம், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள், அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை, உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு 50,000 ரூபாய் வரை உயர்வு, அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா போன்ற திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.