ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (3 நாட்கள்) - 06.03.2023 தேதி முதல் 08.03.2023-ம் தேதி வரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 5, 2023

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (3 நாட்கள்) - 06.03.2023 தேதி முதல் 08.03.2023-ம் தேதி வரை

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (3 நாட்கள்) - 06.03.2023 தேதி முதல் 08.03.2023-ம் தேதி வரை

Entrepreneurship Development and Innovation Institute Export Opportunity Identification & Marketing (3 days - Online Training Program)

In India, opportunity for Export & Import is very exciting and the size of the business is increasing rapidly. To be successful, one has to be thorough with all procedures related to Export.

Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), Chennai is organizing an Online training program on "Export Opportunity Identification & Marketing" from 06.03.2023 to 08.03.2023 (Time: 02.30 pm to 5.30 pm) at EDII, Chennai - 600 032. Subjects covered under the topics on Basics of International Trade, International Marketing methods, Licensing procedures, Identifying potential products for exports, Product classification and its Harmonized System codes, information on importers and markets, Processing and negotiating an Export Order. Besides, inputs on topics such as India's Foreign Trade Policy, Export Incentives, Export Finance, Export Promotion Schemes & Incentives for Exporters.

Interested candidates above 18 years of age with 10th std qualification may register their names with EDII, Website. Entrepreneurs who are already in export business may also enroll to sharpen their skills.

For more information, please visit website www.editn.in. Please contact the following telephone / mobile numbers on working days (Monday - Friday) between 10 A.M. to 05.45 P.M for further information.

Pre registration required For further details please contact: Entrepreneurship Development and Innovation Institute - Telephone and Mobile No: 044-22252081, 22252082, 9677152265, 8668102600.

Issued By: - DIPR, Secretariat, Chennai-9
ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம்

இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (3 நாட்கள்) பயிற்சியினை வரும் 06.03.2023 தேதி முதல் 08.03.2023-ம் தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள்.

ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள். ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

முன்பதிவு அவசியம்:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.

044-22252081/22252082, 9677152265, 8668102600.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.