மாவட்ட இசைப் பள்ளிகளில் 27 முதல் தமிழ் இசை விழா - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 5, 2023

மாவட்ட இசைப் பள்ளிகளில் 27 முதல் தமிழ் இசை விழா

மாவட்ட இசைப் பள்ளிகளில் 27 முதல் தமிழ் இசை விழா

சென்னை:மாவட்ட இசைப் பள்ளிகள் மற்றும் இசைக் கல்லுாரிகளில், தமிழ் இசை விழா நடக்க உள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில், இசைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், குரலிசை, பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில், தேவாரம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில், மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு கற்பிக்கப்படுகிறது.

அதேபோல், சென்னை, கோவை, மதுரை, திருவை யாறு ஆகிய இடங்களில் இசைக் கல்லுாரிகள் உள்ளன.

இங்கு நாட்டுப்புறக் கலை மற்றும் பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில், மூன்றாண்டு பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், நட்டுவாங்கம் இரண்டாண்டு, இசைஆசிரியர் பயிற்சியில் ஓராண்டு பட்டயப் படிப்புகள் உள்ளன. மேலும், இளங்கலை பட்டப் படிப்புகளும் உள்ளன.

இவற்றில் பயிலும் மாணவர்களுக்கு, நேரடி கச்சேரி அனுபவத்தை வழங்கும் வகையிலும், தமிழ் இசையை பரவலாக்கும் வகையிலும், தமிழ் இசை விழா நடத்தப்படுகிறது.

இதில், பிரபல பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள், செவ்வியல் நடன, நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, 17.50 லட்சம் ரூபாயை, கலைப் பண்பாட்டுத் துறை ஒதுக்கி உள்ளது.

இதுகுறித்து, சென்னை இசைக் கல்லுாரி முதல்வர் சாய்ராம் கூறியதாவது:

வரும், 27 முதல் 30ம் தேதி வரை, தமிழ் இசை விழா நடக்க உள்ளது. இதில், கர்நாடக இசைப் பாடகர் காஷீப் மகேஷ், வயலினிசைக் கலைஞர் எம்.சந்திரசேகரன், வீணையிசைக் கலைஞர் ரமணா பாலச்சந்தர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

மங்கல இசை, நாட்டுப்புறக் கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், பெரியகுச்சியாட்டம், களியாட்டம் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.