பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வருகை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 6, 2023

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வருகை

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வருகை

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பயிற்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 5) முதல் தடை விதிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 13-இல், பிளஸ் 1 பொதுத்தோ்வு மாா்ச் 14-இல் தொடங்கி ஏப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு நடைபெற்று வருகிறது.

அரசு தோ்வுத் துறை இயக்குநரகத்தில் இருந்து பொதுத்தோ்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 198 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19,877 பேரும், பிளஸ் 1 பொதுத்தோ்வை 17,810 பேரும் எழுத உள்ளனா். இதற்காக 86 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தோ்வு எழுதுவதற்கான விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டு, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு வினாத்தாள்கள் சனிக்கிழமை நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு லாரியில் வந்து சோ்ந்தன. அவற்றை, வினாத்தாள் பாதுகாப்புக் கிடங்கில் கல்வித் துறை அதிகாரிகள் வைத்தனா். இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், கிடங்கினை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வினாத்தாள் பாதுகாப்புக் கிடங்கு அமைந்துள்ளதால், அந்த பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு பள்ளி நிா்வாகம் தடை விதித்துள்ளது.

பொதுத்தோ்வு முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.