சிறார் திரைப்படத் திருவிழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு - நாள்: 07/03/2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 8, 2023

சிறார் திரைப்படத் திருவிழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு - நாள்: 07/03/2023

சிறார் திரைப்படத் திருவிழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு

அரசுப் பள்ளி மாணவர்கள் தரமான கல்வி பெறவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கல்வி இணைச் செயல்பாடுகளில் அண்மைக் காலமாக தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் ஈடுபடும் வகையில் பள்ளிக் கல்வித் துறை பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பள்ளிதோறும் சிறார் திரைப்படங்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகின்றன. தி கிட், தி மாடர்ன் டைம்ஸ்' 'மல்லி', 'ஸ்வாஷ்' 'ரெட் பலூன்' உட்பட பல திரைப்படங்கள் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் திரையிடப்பட்டு வருகின்றன. திரையிடலுக்குப் பின் சிறப்பான முறையில் தங்கள் படைப்பாற்றலை மாணவர்கள் வெளிப்படுத்தினர். ஒரு காட்சியை நாடகமாக நடித்துக் காட்டுதல், திரைப்படங்களுக்கு சுவரொட்டிகள் வரைதல், அது குறித்து விமர்சன உரையாற்றுதல், விமர்சனக் கட்டுரை எழுதுதல் என பலவித செயல்பாடுகளில் பள்ளியளவில் பங்குபெற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் 27,554 பேர் வட்டார அளவிலான போட்டிகளுக்குத் தேர்வானார்கள். அப்போட்டிகளில் வென்ற 3163 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கெடுத்தனர். அதில் வென்ற 152 மாணவர்கள் மாநில அளவிலான இந்தத் திரைப்பட விழாவிற்கு வருகை புரிந்துள்ளனர். இதிலிருந்து சுமார் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுவர். இது போலவே மாநில அளவிலான வினாடி-வினா போட்டி, சிறார் இலக்கியத் திருவிழா, மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், கலைத் திருவிழாவில் வென்ற மாணவர்களோடு கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

திரைப்படங்களைப் பார்த்தல் மட்டுமல்லாது, அவர்களுக்கு குறும்படங்கள் எடுக்க பயிற்சிப் பட்டறையும் இவ்விழாவில் உண்டு. இதன் துவக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மார்ச் 8 மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கிறது. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். நிகழ்வில் பள்ளிக் கல்விக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா இ.ஆ.ப. அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக சிறார் திரைப்பட விழா கடந்து வந்த பாதை குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரும், விழா திட்டமிடல்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.