#வாத்தி யார்? (வாத்தி - படத்தின் விமர்சனம்) - ஆசிரியரின் பார்வையில்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 17, 2023

#வாத்தி யார்? (வாத்தி - படத்தின் விமர்சனம்) - ஆசிரியரின் பார்வையில்!!

#வாத்தி யார்? (வாத்தியாரின் விமர்சனம்) - ஆசிரியரின் பார்வையில்!!

#வாத்தி யார்?

(வாத்தியாரின் விமர்சனம்)

ஒட்டுமொத்த வாத்தியார்களும்

தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய படம் #வாத்தி

வெள்ளைச்சாமி என்று பெயர் வைத்தவர்களெல்லாம்
வெள்ளையாய் இருப்பதுமில்லை.
கருப்பாயி எனப் பெயர் வைத்தவர்களெல்லாம் கருப்பானவர்களுமில்லை

எல்லாமே நிறம்தான்
எல்லாமே அழகுதான்
அந்த வகையில் வாத்தி என்பது ஒரு சொல் வழக்கு..
அதில் வழக்காட வேண்டியதில்லை என்னும் கருத்தை முன்வைத்து எனது விமர்சனத்தை முன்வைக்கின்றேன்.
*வாத்தி* என்னும் பெயரில் *வாத்தியார்களை தங்கத் தேரில் தாங்கிப் பிடித்திருக்கின்றார்* தனுஷ்
இப்படி
ஒரு படத்தை எடுத்ததற்காக படத்தயாரிப்புக் குழுவிற்கும்,
இப்படி ஒரு படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுசுக்கும் எனது வாழ்த்துகளும்,
நன்றிகளும்
கல்வியை நேசிக்கின்ற
மாணவர்களை நேசிக்கின்ற
இந்த சமூகத்தை நேசிக்கின்ற
வாத்தியார்கள்
முதல்வரிசையில் நின்று பார்க்க வேண்டிய படம் *வாத்தி*
திரைப்படத்தினும்
அதிகமாக
இந்த சமுதாயத்திற்காக
பாடுபடுகின்ற ஆசிரியர்களைக் கொண்டாடத் தவறுகின்ற, மறுக்கின்ற நிலை மட்டும் மாறிவிட்டால்
கல்வியில் நாம்
எங்கோ உயர்ந்துவிடுவோம்
கார்ப்பரேட்டுக்களின்
கைப்பிடிக்குள் சிக்காமல் கல்வியைக் காப்பாற்ற வேண்டிய
நம் அனைவரின் கடமை என்பதையும் இப்படம் உணர்த்துகின்றது.
படிப்பை சொல்லித்தருவது
யாராக இருந்தாலும்
அவங்க கடவுளுக்கும் மேலே என்கிற காட்சிகளில் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளலாம் ஆசிரியர்கள்.

வாத்தியார் என்பது
வேலை இல்லை
அது ஒரு பொறுப்பு என்கிற பொறுப்பான எண்ணத்தை படம் பார்க்கின்ற அத்தனை பேருக்குள்ளும் ஏற்படுத்தும் இந்த *வாத்தி*

வாங்குற சம்பளத்தைவிட
படிக்கிற மாணவர்களுக்கு மதிப்பு அதிகம்.
அந்த மதிப்பை உணர்ந்தால் மரியாதை தானாகவே கிடைத்து விடும் என்பதை உணர முடிந்தால் ஆசிரியர்கள் இன்னும் உயர்ந்த இடத்தில் ஆசிரியர்கள் அமர்ந்துகொள்ள முடியும்.
ஓர் ஆசிரியரின் கோபம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தப்படம்
ஓர் எடுத்துக்காட்டு
சமுத்திரக்கனி நடித்த
சாட்டை படத்துடன் ஒப்பிட்டால்,
ஆயிரம் சாட்டைகளுக்கும்
அதிகம் இந்த *வாத்தி*
ஓர் ஆசிரியர்
நல்லது செய்ய வேண்டும் என முடிவெடுத்து விட்டால்,
அதனைத் தடுத்து நிறுத்தும் தகுதி
இந்தத் தரணியில் எவருக்கும் கிடையாது என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது
இப்படம்.
தன் குழந்தைகளை நேசிக்கின்ற பெற்றோர்களும்,
கல்வியை நேசிக்கின்ற மாணவர்களும்,
இந்த சமுதாயத்தை நேசிக்கின்ற ஆசிரியர்களும் கொண்டாட வேண்டிய படம் *வாத்தி*
இந்த சமுதாயத்தின் பெரும்பற்றுக்கொண்ட ஆசிரியராக


மாணவர்களின் முன்னேற்றத்திற்காக

நன்கொடையாளர்களிடம் கையேந்தி
இன்றைக்கு
6 மருத்துவர்களை உருவாவதற்கு,
60 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் உருவாவதற்கு,
வாழிடம் இல்லாதவர்களுக்கு
12 வீடுகள் கிடைப்பதற்கு,
மிதிவண்டிகள் கிடைப்பதற்கு, தரமான கல்வி கிடைப்பதற்கு பல லட்சம் நன்கொடைகளை திரட்டிக் கொடுத்திருக்கின்றோம் என்பதை
வாத்தி எனக்கு நினைவூட்டி,
என்மீது என்னையே மரியாதை கொள்ளச் செய்தது.

இன்னும் செல்ல வேண்டிய தூரமும்,
செய்ய வேண்டிய பணியும் நிறைய இருக்கின்றது என்பதைக் கண்கள் ததும்ப எனக்கு
நானே சொல்லிக் கொள்கிறேன்..
நடிகர் தனுசின் திரையுலக வரலாற்றில் இது Life Time Hit ஆக அமையும்..
தனக்குக் கிடைக்க வேண்டிய கௌரவத்தைக்கூட,

மாணவர்களின் எதிர்காலத்திற்காக தியாகம் செய்யும்பொழுது
ஓர் ஆசிரியராக எழுந்து நின்று கைதட்ட வைக்கின்றார் தனுஷ்..
நடிகர் தனுசை முதன்முறையாக நல்ல மனிதராகப் பார்க்கத் தோன்றுகிறது..

நன்றி
சிகரம் சதிஷ்
ஆசிரியர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.