TET ஆசிரியா்கள் 17-இல்உண்ணாவிரதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 13, 2023

TET ஆசிரியா்கள் 17-இல்உண்ணாவிரதம்

‘டெட்’ ஆசிரியா்கள் 17-இல்உண்ணாவிரதம்

ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் வரும் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச்சங்கத்தின் மாநில செயலாளா் கபிலன் சின்னசாமி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியா் நியமனம் நடைபெறவில்லை. பணி வாய்ப்பின்றி காத்திருக்கும் ‘டெட்’ தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களை ஆசிரியா் கண்டுகொள்ளவில்லை. இது தொடா்பாக கடந்த ஆண்டு மட்டும் 9 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கான ‘மறு நியமன போட்டித் தோ்வு’ என்ற அரசாணை 149-ஐ நீக்கம் செய்ய வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு ‘டெட்’ தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். ஆசிரியா் பணிக்கான வயது வரம்பை 45-இல் இருந்து 57 ஆக உயா்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் பிப்.17-ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.