தனியார் பள்ளிக்கான நிலப்பரப்பு விதிகளில் மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 12, 2023

தனியார் பள்ளிக்கான நிலப்பரப்பு விதிகளில் மாற்றம்

தனியார் பள்ளிக்கான நிலப்பரப்பு விதிகளில் மாற்றம் Change in land rules for private school

பள்ளி கல்வித்துறை விதிகளின்படி, தமிழகத்தில் செயல்படும், தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு, உள்ளாட்சி பகுதிகளுக்கு ஏற்ப, குறைந்தபட்ச நிலப்பரப்பு இருக்க வேண்டும்.

மாநகராட்சிகளில், 33 சென்ட்; நகர பகுதிகளில், 1 ஏக்கர்; கிராம பகுதிகளில், 3 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும்.

இட நெருக்கடி மற்றும் பொருளாதார காரணங்களால், இந்த விதிகளை தளர்த்த வேண்டும் என, தனியார் பள்ளிகளின் நீண்ட கால கோரிக்கையை அரசு ஏற்று, நிலப்பரப்புக்கான விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

 கிராமம், நகரம் என, அனைத்து இடங்களிலும், பிளே ஸ்கூல், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, 3 கிரவுண்ட் நிலம்; அதாவது, ஒரு கிரவுண்ட் 2,400 என்ற அடிப்படையில், 7,200 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்  நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, சென்னை போன்ற பெரு நகரங்களில், 5 கிரவுண்ட் நிலம் இருக்க வேண்டும்; மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கு, 6 கிரவுண்ட் நிலம் இருக்க வேண்டும்

 மாவட்ட தலைநகரங்களில், 7 கிரவுண்ட்; நகராட்சி பகுதிகளில 8 கிரவுண்ட்; பேரூராட்சிக்கு, 10 கிரவுண்ட் மற்றும் கிராம பஞ்சாயத்து என்றால், 2 ஏக்கர் நிலப்பரப்பு இருக்க வேண்டும்

 ஒரு மாணவருக்கு, தலா, 10 சதுர அடி வீதமும்; வகுப்பறையில் ஆசிரியருக்கு, 40 சதுர அடி வீதமும் இடம் ஒதுக்க வேண்டும்

 ப்ரீ.கே.ஜி.,யில், ஒரு வகுப்பறைக்கு, அதிகபட்சம், 15 மாணவர்கள்; எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பறையிலும், அதிகபட்சம், 30 பேர்; 6 முதல் 8ம் வகுப்பு வரை அதிகபட்சம், 35 பேர்; 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தலா, வகுப்பறையில் அதிகபட்சம், 40 மாணவர்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும்

 அடிப்படை கட்டமைப்பான, குடிநீர், கழிப்பறை, நுாலகம், ஆய்வகம், கல்வி இணை செயல்பாடுகளுக்கான இடம், மைதானம் போன்றவற்றையும், உரிய விதிப்படி பின்பற்ற வேண்டும் என, தனியார் பள்ளிகளுக்கான நிலப்பரப்பு விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

இந்த விதிகளை, பள்ளி நிர்வாகிகளுக்கு தெரிவிக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.